ta_obs/content/45.md

12 KiB

45. ஸ்தேவான் மற்றும் பிலிப்பு

OBS Image

முதலில் கிறிஸ்தவர்களாக மாறியவர்களில் தலைவனாக இருந்தவன் பெயர் ஸ்தேவான். எல்லோரும் அவனை கணம் பண்ணினார்கள். பரிசுத்த ஆவியானவர் அவனுக்கு வல்லமையையும், நியானத்தையும் தந்ததினால், ஸ்தேவான் அநேக அற்புதங்களைச் செய்தான், மேலும் அவன் இயேசுவைப் பற்றி பிரசங்கம் செய்தபோது அநேக ஜனங்கள் அவனை விசுவாசித்தார்கள்.

OBS Image

ஒருநாள் ஸ்தேவான் இயேசுவைப் பற்றி போதித்துக் கொண்டிருக்கும்போது, இயேசுவை ஏற்றுக் கொள்ளாத சில யூதர்கள் அங்கே வந்து, அவனிடம் வாக்குவாதம் செய்தனர். அவர்கள் ஸ்தேவான்மேல் மிகவும் கோபமடைந்து, மதத் தலைவர்களிடம் போய், ஸ்தேவான் மோசேயைக் குறித்தும், தேவனைக் குறித்தும் தவறாய் பேசுகிறான்! என்று பொய் சொன்னார்கள். எனவே மதத் தலைவர்கள் ஸ்தேவானைப் பிடித்து, யூதர்களின் பிரதான ஆசாரியர்கள் மற்ற தலைவர்களிடதிற்கு கொண்டு போய், ஸ்தேவானைப் பற்றி பொய்யான சாட்சிகளை சொல்லும்படி அநேகரை வரவழைத்தார்கள்.

OBS Image

பிரதான ஆசாரியன் ஸ்தேவானிடத்தில் இவர்கள் உன்னைப் பற்றி சொல்லுவது உண்மை தானா? என்று கேட்டான். பிரதான ஆசாரியனுக்கு பதிலாக ஸ்தேவான் அநேகக் காரியங்களைச் சொன்னான். அதாவது, தேவன் இஸ்ரவேலருக்கு ஆபிரகாம் நாட்கள் முதல் இயேசுவின் நாட்கள் வரைக்கும் அநேக அற்புதங்கள் செய்தார், ஆனாலும் ஜனங்கள் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். அதேபோல நீங்களும் தேவனை எதிர்த்து, அவருக்கு விரோதமான காரியங்களைச் செய்து, பரிசுத்த ஆவியை புறக்கணித்து, அவருடைய தீர்க்கதரிசிகளை கொலை செய்கிறீர்கள்! அதிலும் மிக மோசமான காரியம் நீங்கள் அந்த மேசியாவை கொன்று போட்டது தான் என்றான்!

OBS Image

மதத்தலைவர்கள் அதைக் கேட்டு, மிகவும் கோபமடைந்து, அவர்களுடைய காதுகளை மூடிக்கொண்டு, ஸ்தேவானை சத்தமாக திட்டினார்கள். பின்பு அவனைப் பிடித்து இழுத்து, நகரத்திற்கு வெளியே கொண்டு போய் அவன் சாகும்படி கல்லெறிந்தார்கள்.

OBS Image

ஸ்தேவான் மரிக்கும் போது, என்னுடைய ஆவியை எடுத்துக் கொள்ளும் என்று சத்தமாக சொல்லி, முழங்காலில் நின்று மிகவும் அலறினான். ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதிரும் என்று சொல்லி மரித்துப் போனான்.

OBS Image

அந்த நாள் முதல் எருசலேமில் இருந்தவர்கள் இயேசுவைப் பின்பற்றுகிறவர்களை கொடுமைபடுத்த ஆரம்பித்தனர். அதினால் அங்கே இருந்த கிறிஸ்தவர்கள் மற்ற இடங்களுக்கு சிதறிப் போனார்கள். அதினால் அவர்கள் எங்கே போனார்களோ அங்கேயெல்லாம் இயேசுவைக்குறித்து பிரசங்கித்தார்கள்.

OBS Image

எருசலேமிலிருந்து மற்ற இடங்களுக்கு சிதறிப்போன கிறிஸ்தவர்களில் பிலிப்பு என்னும் ஒருவன் இருந்தான். அவன் சமாரியாவுக்குப் போயிருந்தான். அங்கே அவன் இயேசுவைக் குறித்து பிரசங்கம் செய்ததினால் அநேகர் விசுவாசித்து, இரட்சிக்கபட்டார்கள். ஒருநாள், தேவதூதன் அவனிடத்தில், வனாந்திரத்தில் ஒரு பாதை வழியாக நடந்து போகும்படி சொன்னான். பிலிப்பும் அப்படியே அந்த பாதையில் நடந்துபோகும் போது, வேறொருவன் ரதத்தில் வருகிறதைப் பார்த்தான். அவன் எத்தியோப்பியா தேசத்தின் முக்கிய அதிகாரியாயிருந்தான். அவனிடத்தில் போய் பேசும்படி பரிசுத்த ஆவியானவர் பிலிப்புவிடம் சொன்னார்.

OBS Image

எனவே பிலிப்பு, அந்த ரத்தத்திற்கு பக்கத்தில் போய், அந்த எத்தியோப்பியன் தேவனுடைய வார்த்தையை வாசிக்கிரதைப் பார்த்தான். அவன் ஏசாயா தீர்க்கதரிசன புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தது என்னவென்றால். ஒரு ஆட்டுக்குட்டியைப் போல ஒருவரை கொலை செய்யும்படி கொண்டு போனார்கள், அவர் அமைதியாக ஒன்றும் பேசாமல் இருந்தார். ஆட்டுக்குட்டியானவரை அவமானப்படுத்தி, துன்பப்படுத்தினார்கள். பின்பு அவரைக் கொன்றுப் போட்டார்கள்.

OBS Image

பிலிப்பு எத்தியோப்பியனிடத்தில் நீர் வாசிக்கிறது, உமக்கு புரிகிறதா? என்று கேட்டான். அதற்கு அவன், இல்லை, யாராவது எனக்கு இதை புரியும்படி சொன்னால் தான் புரியும் என்றான். பின்பு அவன் பிலிப்புவை கூப்பிட்டு, அருகில் உட்காரவைத்து, ஏசாயா யாரைப் பற்றி இங்கே எழுதியிருக்கிறான்? அவனைப் பற்றியா? என்று கேட்டான்.

OBS Image

பிலிப்பு அந்த ரதத்தில் ஏறி உட்கார்ந்து, ஏசாயா இங்கே இயேசுவைக்குறித்து எழுதியிருக்கிறா என்று சொன்னான். மேலும் பிலிப்பு வேதத்திலிருந்து அநேக காரியங்களைப் பற்றி அவனோடு பேசி, அவனுக்கு இயேசுவின் நற்செய்தியை சொன்னான்.

OBS Image

அப்படியே அவர்கள் இருவரும் பிரயாணம் பண்ணி, தண்ணீர் இருக்கும் ஓர் இடத்திற்கு வந்தார்கள். எத்தியோப்பியன், பார்! இங்கே கொஞ்சம் தண்ணீர் இருக்கிறது! நான் ஸ்நானம் எடுக்கலாமா? என்று கேட்டு, ரதத்தை நிறுத்தும்படி வேலைக்காரனிடம் சொன்னான்.

OBS Image

பின்பு அவர்கள் இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள். பிலிப்பு, எத்தியோப்பியனுக்கு ஸ்நானம் கொடுத்தான். பின்பு அவர்கள் இருவரும் தண்ணீரிலிருந்து வெளியே வந்தார்கள். உடனே பரிசுத்த ஆவியானவர், பிலிப்பு, இயேசுவைப் பற்றி தொடர்ந்து மற்றவர்களுக்கு சொல்லும்படிக்கு அங்கேயிருந்து எடுத்துக் கொண்டு போனார்.

OBS Image

அதற்கு பின்பு எத்தியோப்பியன், தான் இயேசுவை யார் என்று தெரிந்து கொண்டதினால், சந்தோஷமாக தன் வழியே போனான்.

வேதாகம கதை: அப்போஸ்தலர் 6:8-8:5; 8:26-40