ta_obs/content/41.md

6.3 KiB

41. இயேசுவை தேவன் மரணத்திலிருந்து எழுப்புதல்

OBS Image

சேவகர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்த பின்பு, யூத தலைவர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அந்த பொய்யன், இயேசு, மரித்து மூன்று நாளைக்குள் திரும்ப உயிர்த்தெழுவேன் என்று சொல்லியிருக்கிறான். எனவே கல்லறையை யாராவது காவல் காக்க வேண்டும், இல்லையென்றால், அவனுடைய சீஷர்கள் அவனுடைய உடலைத் திருடிக்கொண்டு போய், அவன் உயிர்த்தெழுந்தான் என்று சொல்லுவார்கள் என்றனர்.

OBS Image

பிலாத்து அவர்களிடத்தில், உங்களுக்கு தேவைப்படுகிற சேவகர்களை வைத்து அந்தக் கல்லறையை காவல் செய்யுங்கள் என்றான். எனவே, அந்தக் கல்லறையின் வாசலுக்கு சீல் வைத்து, ஒருவரும் இயேசுவின் சரீரத்தை எடுத்துக் கொண்டு போகாத படிக்கு அங்கே சேவகர்களை நிறுத்தினார்கள்.

OBS Image

இயேசு மரித்த அடுத்தநாள் ஓய்வு நாளாயிருந்தது. அந்நாளில் ஒருவரும் வேலை செய்ய மாட்டார்கள், எனவே இயேசுவின் நண்பர்கள் ஒருவரும் கல்லறைக்குப் போகவில்லை. ஆனால் ஓய்வு நாளுக்கு அடுத்த நாள் அதிகாலையில் நிறையப் பெண்கள் இயேசுவின் சரீரத்திற்கு நறுமணமூட்டும் படிக்கு, இயேசுவின் கல்லறைக்குப் போக புறப்பட்டனர்.

OBS Image

பெண்கள் அங்கே போவதற்கு முன்பே, கல்லறையின் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வானத்திலிருந்து ஒரு தேவ தூதன் வந்து, கல்லறையின் வாசலில் வைத்திருந்த கல்லைப் புரட்டி, அதிலே உட்கார்ந்தான். அந்த தூதன் ஒளிரும் வெளிச்சத்தைப் போலவும், மின்னலைப் போலவும் இருந்தான். அந்த தூதனைப் பார்த்த சேவகர்கள் மிகவும் பயந்து, கீழே விழுந்து, செத்தவர்களைப் போல ஆனார்கள்.

OBS Image

அந்தப் பெண்கள் கல்லறைக்கு வந்தவுடன், தூதன் அவர்களிடத்தில், பயப்படாதிருங்கள், இயேசு இங்கே இல்லை. அவர் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்! கல்லறைக்கு உள்ளே பாருங்கள் என்றான். அவர்கள் கல்லறைக்குள் பார்த்தபோது, இயேசுவின் சரீரத்தை வைத்திருந்த அந்த இடத்தில் அவர் சரீரம் இல்லை!

OBS Image

பின்பு அதன் தூதன் பெண்களிடத்தில், நீங்கள் போய் சீஷர்களிடத்தில் இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். என்றும், அவர் அவர்களுக்கு முன்பு கலிலேயாவுக்குப் போனார் என்றும் சொல்லச் சொன்னான்.

OBS Image

அந்த பெண்கள் ஆச்சரியப்பட்டு, மிகுந்த சந்தோஷத்தினால், சீஷர்களுக்கு அந்த நல்ல செய்தியை சொல்லும்படி ஓடினார்கள்.

OBS Image

அந்த பெண்கள் சீஷர்களுக்கு நல்ல செய்தியை சொல்லும்படி போகையில், இயேசு அவர்களுக்கு தோன்றிர்! அவர்கள் அவருடைய காலில் விழுந்தார்கள். இயேசு அவர்களிடத்தில், பயப்படாதிருங்கள். என்னுடைய சீஷர்களை கலிலேயாவுக்குப் போக சொல்லுங்கள். அவர்கள் என்னை அங்கே பார்ப்பார்கள் என்றார்.

வேதாகம கதை: மத்தேயு 27:62-28:15; மாற்கு 16:1-11; லூக்கா 24:1-12; யோவான் 20:1-18