ta_obs/content/40.md

7.3 KiB

40. இயேசுவை சிலுவையில் அறைதல்

OBS Image

சேவர்கள் இயேசுவை கிண்டல் செய்து, அவரை சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள். அவர் சிலுவையை சுமக்க வைத்தார்கள்.

OBS Image

சேவர்கள், இயேசுவை கபால ஸ்தலம் என்று அழைக்கப்படும் இடத்திற்கு கொண்டு போய், சிலுவையில் அவருடைய கைகளிலும், கால்களிலும் ஆணிகளால் அடித்தார்கள். இயேசு, பிதாவே இவர்களை மன்னியும், அவர்கள் செய்கிறது என்னதென்று அவர்களுக்குத் தெரியாது என்றார். மேலும் அவர்கள் சிலுவையில் இயேசுவின் தலைக்கு மேல், சிறிய பலகையில் யூதருடைய ராஜா. என்று எழுதி வைத்தார்கள். பிலாத்து அப்படி எழுதும்படி சொல்லியிருந்தான்.

OBS Image

அதன் பின்பு, சேவகர்கள் இயேசுவின் துணிக்காக சீட்டுப் போட்டார்கள். அவர்கள் அப்படிச் செய்து, என் உடையின் பேரில் சீட்டுப் போட்டு அதைப் பங்கிட்டுக் கொண்டார்கள் என்று சொல்லப்பட்ட தீர்க்கத்தரிசனத்தை நிறைவேற்றினார்கள்.

OBS Image

அதே சமயத்தில் இரண்டு திருடர்களும் அங்கே சிலுவையில் அறையப்பட்டிருந்தார்கள். அவர்கள் இயேசுவுக்கு இரண்டு பக்கத்திலும் வைக்கபட்டிருந்தார்கள். அதில் ஒரு திருடன் இயேசுவை கிண்டல் செய்தான். அதற்கு மற்றவன், தேவன் உன்னை தண்டிப்பார் என்று உனக்கு பயம் இல்லையா? நாம் அநேக குற்றங்கள் செய்து தண்டிக்கபடுகிறோம், ஆனால் இந்த மனுஷன் குற்றம் எதுவும் செய்யவில்லை என்றான். பின்பு அவன் இயேசுவைப் பார்த்து, நீர் உம்முடைய ராஜ்யத்தில் ராஜாவாகும் போது, என்னையும் நினைத்தருளும் என்றான். அதற்கு இயேசு, இன்றைக்கு, நீ என்னோடுகூட பரலோகத்தில் இருப்பாய் என்றார்.

OBS Image

யூத தலைவர்களும், அங்கே இருந்த ஜனங்களும், நீ தேவனுடைய மகன் என்றால், சிலுவையிலிருந்து இறங்கி வந்து, உன்னை நீயே இரட்சித்துக்கொள். அப்போது நாங்கள் உன்னை நம்புவோம் என்று சொல்லி இயேசுவை கிண்டல் செய்தனர்.

OBS Image

பின்பு, நடுப்பகலாயிருந்தும் வானம் முழுவதும் இருளடைந்தது. மத்தியானத்தில் இருள் சூழ்ந்து, மூன்று மணிநேரம் அப்படியே இருந்தது.

OBS Image

அப்போது இயேசு, சத்தமாக எல்லாம் முடிந்தது! பிதாவே, உம்முடைய கைகளில் என்னுடைய ஆவியை ஒப்புக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தலையை சாய்த்து, ஜீவனை விட்டார். அப்போது அங்கே நிலநடுக்கம் உண்டானது. ஜனங்களை தேவனுடைய பிரசன்னத்திலிருந்து பிரிக்கும்படி தேவாலயத்தில் இருந்த திரைச் சீலை மேலேயிருந்து கீழேவரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.

OBS Image

இயேசுவின் மரணத்தினால், ஜனங்கள் தேவனிடத்தில் போவதற்கு வழி திறந்தது. இயேசுவைக் காத்துக் கொண்டிருந்த சேவகர்கள் நடந்த எல்லாவற்றையும் பார்த்து, உண்மையாகவே இந்த மனுஷன் நீதிமான். இவர் தேவனுடைய மகன் தான் என்றார்கள்.

OBS Image

பின்பு யூத தலைவர்களில் இரண்டுபேர் இயேசுவை மேசியா என்று நம்பினார்கள். அவர்களில் ஒருவன் யோசேப்பு மற்றவன் நிக்கொதேமு. அவர்கள் இருவரும் வந்து, பிலாத்துவினிடத்தில் இயேசுவின் உடலைக் கேட்டு வாங்கி, அவர் உடலை சீலையினால் சுற்றி, கற்பாறையை உடைத்து செய்யப்பட்ட கல்லறையில் வைத்தார்கள். பின்பு பெரிய கல்லை உருட்டி அதின் வாசலை அடைத்தார்கள்.

வேதாகம கதை: மத்தேயு27:27-61; மாற்கு 15:16-47; லூக்கா 23:26-56; யோவான் 19:17-42