ta_obs/content/39.md

9.6 KiB

39. இயேசு சோதிக்கபடுதல்

OBS Image

அது நடு இரவாயிருந்தது. சேவகர்கள் இயேசுவை பிரதான ஆசாரியனுடைய வீடிற்கு சில கேள்விகளை கேட்கும்படி கொண்டு போனார்கள். பேதுரு அவரைத் பின்தொடர்ந்து தூரத்திலே இருந்தான். சேவகர்கள் இயேசுவை வீட்டிற்க்குள் கொண்டு போனதும், பேதுரு தீயில் குளிர் காயும்படி வெளியே இருந்தான்.

OBS Image

வீட்டிற்க்குள் யூத தலைவர்கள் இயேசுவை சோதித்தனர். அவர்கள் இயேசுவுக்கு எதிராக பொய் சொல்ல, நிறைய பொய் சாட்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள், ஆனால் அவர்கள் ஒருவருடைய வார்த்தையும், மற்றவர்களோடு ஒத்து போகவில்லை. எனவே யூத தலைவர்களால் அவரிடத்தில் குற்றம் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. இயேசு ஒன்றும் பேசவில்லை.

OBS Image

கடைசியில், பிரதான ஆசாரியன் இயேசுவைப் பார்த்து, நீ ஜீவனுள்ள தேவனுடைய மகனாகிய மேசியாவா? சொல், என்றான்.

OBS Image

இயேசு, ஆம், தேவன் பரலோகத்திலிருந்து வருகையில், நான் அவருடைய வலது பக்கத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்ப்பீர்கள் என்றார். உடனே பிரதான ஆசாரியன் இயேசுவின்மேல் மிகவும் கோபமடைந்து, தன்னுடைய ஆடையை கிழித்து, இவனைப் பற்றி சொல்ல நமக்கு வேறு சாட்சி தேவையில்லை! நீங்களே அவன் தேவனுடைய மகன் என்று சொல்வதைக் கேட்டீர்கள் என்றான். இவனைக் குறித்து நீங்கள் என்ன முடிவு செய்கிறீர்கள்? என்றான்.

OBS Image

யூத தலைவர்கள் எல்லோரும் பிரதான ஆசாரியனிடத்தில் மரணத்திற்கு ஏதுவானவன்! என்று சொல்லி, அவருடைய கண்களைக் கட்டி, அவர்மேல் துப்பி, அறைந்து, கிண்டல் செய்தார்கள்.

OBS Image

பேதுரு அந்த வீடிற்கு வெளியே இருந்தான். ஒரு வேலைகாரி அவனைப் பார்த்து, நீயும் இயேசுவோடு இருந்தவன் தானே! என்றாள், பேதுரு இல்லை என்றான். பின்பு, வேறொரு பெண் வந்து அதேபோல கேட்டாள், பேதுரு திரும்பவும் இல்லை என்றான். கடைசியாக, அங்கே இருந்த சிலர் நீயும் இயேசுவோடு இருந்தவன் தானே, நீங்கள் இருவரும் கலிலேயர்கள் என்றார்கள்.

OBS Image

பின்பு பேதுரு, இந்த மனிதனை நான் அறிந்திருந்தால் தேவன் என்னை சபிப்பாராக! என்று சொல்லி சத்தியம் பண்ணினான். இப்படி அவன் செய்தபோது சேவல் கூவிற்று. இயேசு திரும்பி பேதுருவைப் பார்த்தார்.

OBS Image

பேதுரு அந்தவேறு பக்கம் போய், மிகவும் அழுதான். அதே சமயத்தில், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ், யூத தலைவர்கள் இயேசுவைக் கொலை செய்யும்படி ஒப்புக்கொடுக்க போவதினால், மிகுந்த வருத்தமடைந்து, தற்கொலை செய்து கொண்டான்.

OBS Image

அந்த ஊரின் அதிகாரியாக பிலாத்து இருந்தான். அவன் ரோமருக்கு வேலை செய்தான். அவனிடத்தில் யூத தலைவர்கள் இயேசுவைக் கொண்டு வந்தனர். அவர்கள் இயேசுவை பிலாத்து கொலை செய்ய ஒப்புக் கொடுக்கும்படி விரும்பினார்கள். பின்பு பிலாத்து இயேசுவினிடத்தில், யூதருடைய ராஜாவா என்று கேட்டான்?

OBS Image

இயேசு பிலாத்துவினிடத்தில், நீர் சொன்னபடிதான். ஆனால் என்னுடைய ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, அப்படியிருந்தால் என்னுடையவர்கள் எனக்காக சண்டைபோட வந்திருப்பார்கள் என்றார். நான் இந்த உலகத்திற்கு தேவனைக் குறித்து உண்மையை சொல்ல வந்தேன். அதை விரும்புகிறவன் நான் சொல்வதைக் கேட்பான் என்றார். என்ன உண்மை? என்று பிலாத்து கேட்டான்.

OBS Image

இயேசுவிடம் பேசி முடித்த பிலாத்து, ஜனங்களிடம் போய், இந்த மனிதன் மரணத்திற்கு எதுவாய் எதையும் செய்ததாக எனக்குத் தெரியவில்லை என்றான். ஆனால் யூத தலைவர்களும் ஜனங்களும், அவனை சிலுவையில் அறய வேண்டும்! என்று சத்தமாய் சொன்னார்கள். பிலாத்து அவர்களுக்கு, அவரிடத்தில் எந்த குற்றத்தையும் நான் பார்க்கவில்லை என்றான், ஆனால் அவர்கள் அதிலும் அதிகமாய் சத்தம் போட்டார்கள். மூன்றாவது முறையும் பிலாத்து, அவர் குற்றம் ஒன்றும் செய்யவில்லை! என்றான்.

OBS Image

பின்பு பிலாத்து, ஜனங்களுக்குள் கலவரம் ஏதாவது நடக்கும் என்று பயந்து, இயேசுவை சேவர்கள் சிலுவையில் அறையும்படி ஒப்புக் கொண்டான். ரோம படைவீரர்கள் இயேசுவை பிடித்து, அவருக்கு ஒரு அங்கியை போட்டு, முள்ளினால் செய்யப்பட்ட ஒரு கிரீடத்தை தலையில் வைத்தார்கள். பின்பு பாருங்கள், இவன் யூதருடைய ராஜா என்று கிண்டல் செய்தார்கள்!

வேதாகம கதை: மத்தேயு26:57-27:26; மாற்கு 14:53-15:15; லூக்கா 22:54-23:25; யோவான் 18:12-19:16