ta_obs/content/37.md

8.2 KiB

37. மரித்த லாசருவை இயேசு எழுப்புதல்

OBS Image

லாசரு என்று ஒருவன் இருந்தான், அவனுக்கு இரண்டு சகோதிரிகள் இருந்தார்கள். அவர்கள் பெயர், மரியாள், மார்த்தாள். அவர்கள் இயேசுவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். ஒருநாள் லாசரு வியாதியாய் இருக்கிறான் என்று இயேசு கேள்விப்பட்டு, லாசருவின் வியாதி, மரணத்திற்கு எதுவாய் இல்லாமல், ஜனங்கள் தேவனை மகிமைப்படுத்துவதற்கு எதுவாயிருக்கும் என்றார்.

OBS Image

இயேசு அவர்களை நேசித்தும், தாம் இருந்த இடத்தில் இரண்டு நாட்கள் தங்கினார். பின்பு அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் யுதேயாவுக்கு போவோம் என்றார். அதற்கு சீஷர்கள், போதகரே. கொஞ்ச நாட்களுக்கு முன்பு அங்கே இருக்கும் ஜனங்கள் உம்மை கொலை செய்ய நினைத்தார்கள் அல்லவா என்றார்கள்! இயேசு அவர்களிடத்தில், நம்முடைய நண்பனாகிய லாசரு தூங்கிக் கொண்டு இருக்கிறான். அவனை நான் எழுப்ப வேண்டும் என்றார்.

OBS Image

சீஷர்கள் இயேசுவினிடத்தில், போதகரே, லாசரு தூங்கினால் அவன் சுகமாவான் என்றார்கள். பின்பு இயேசு அவன் மரித்ததை மேலோட்டமாக சொன்னார். அவர்கள் என்னை நம்பும்படிக்கு, நான் அங்கே இல்லாததினால் சந்தோஷமடைகிறேன் என்றார்.

OBS Image

இயேசு, லாசருவின் சொந்த ஊருக்கு வந்தபோது, அவன் மரித்து நான்கு நாட்கள் ஆயிற்று. மார்த்தாள் போய் இயேசுவை சந்தித்து, போதகரே, நீர் இங்கே இருந்திருந்தால் லாசரு மரித்திருக்க மாட்டான். ஆனாலும், நீர் தேவனிடத்தில் கேட்கிற எதையும் அவர் உமக்குச் செய்வார் என்று நான் நம்புகிறேன் என்றாள்.

OBS Image

இயேசு அவளிடத்தில், நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னை நம்புகிறவன் மரித்தாலும் பிழைப்பான். என்னை நம்புகிறவன் எவனும் மரிப்பதில்லை. இதை நீ நம்புகிறாயா? என்று மார்த்தாளிடம் கேட்டார். அதற்கு அவள், போதகரே! நீர் தேவனுடைய மகன், மேசியா என்று உம்மை நம்புகிறேன் என்றாள்.

OBS Image

பின்பு மரியாள் வந்து, இயேசுவின் காலில் விழுந்து, நீர் இங்கே இருந்திருந்தால் லாசரு மரித்திருக்க மாட்டான் என்றாள். இயேசு அவர்களை பார்த்து, லாசருவை எங்கே வைத்திருக்கிறீர்கள் ? என்று கேட்டார். அவர்கள், கல்லறையில் வைத்திருக்கிறோம் வந்து பாரும் என்றார்கள். அப்போது இயேசு அழுதார்.

OBS Image

கல்லறை என்பது ஒரு குகைப் போன்றது, அதின் வாசலில் உருட்டக்கூடியக் கல்லை வைத்திருப்பார்கள். இயேசு அங்கே வந்து, அந்தக் கல்லை உருட்டும்படி சொன்னார். அப்போது மார்த்தாள், அவன் மரித்து நான்கு நாட்கள் ஆயிற்று, இப்போது நாறுமே என்றாள்.

OBS Image

இயேசு பதிலாக, நான் உனக்குச் சொல்லவில்லையா? நீ என்னை நம்பினால் தேவனுடைய வல்லமையைப் பார்ப்பாய் என்று சொல்லி, எனவே அவர்கள் அந்தக் கல்லை புரட்டினார்கள்.

OBS Image

பின்பு இயேசு வானத்தைப் பார்த்து, அப்பா, எனக்குச் செவி கொடுப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். நீர் எப்போதும் எனக்குச் செவி கொடுக்கிறீர். ஆனாலும், இங்கே நிற்கிற இந்த ஜனங்கள் நீர் தான் என்னை அனுப்பினீர் என்று நம்பும்படியாக என்று சொல்லி, லாசருவே வெளியே வா என்று சத்தமிட்டார்.

OBS Image

பின்பு லாசரு வெளியே வந்தான். அவன் கல்லறையின் சீலையில் இன்னும் சுற்றப்பட்டிருந்தான். இயேசு அங்கே இருந்தவர்களைப் பார்த்து, அந்தக் கல்லறையின் சீலையை அவிழ்த்து விடுங்கள் என்றார்! இந்த அற்புதத்தினால் யூதர்களில் அநேகர் இயேசுவை நம்பினார்கள்.

OBS Image

ஆனால் யூதர்களின் மதத்தலைவர்கள் இயேசுவின்மேல் பொறாமைப்பட்டு, அவர்கள் ஒன்றுகூடி, இயேசுவையும் லாசருவையும் எப்படி கொலை செய்யலாம் என்று ஆலோசித்தார்கள்.

வேதாகம கதை: யோவான் 11:1-46