ta_obs/content/28.md

6.1 KiB
Raw Permalink Blame History

28. வாலிபப் பணக்கார அதிகாரி

OBS Image

ஒருநாள், வாலிபப் பணக்கார அதிகாரி, இயேசுவினிடத்தில் வந்து, நல்ல போதகரே. நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். என்னை ஏன் நல்லவன் என்று சொல்லுகிறாய்? ஒருவரே நல்லவர். அவர் தேவனே என்று சொல்லி, நீ நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள, தேவனுடைய கற்பனைகளின்படி நடக்கவேண்டும் என்று இயேசு சொன்னார்.

OBS Image

அவைகளில் நான் எதை செய்ய வேண்டும்? என்று கேட்டான். அதற்கு இயேசு, கொலை செய்யாமல் இருக்க வேண்டும். விபச்சாரம் செய்யாமல் இருக்க வேண்டும். திருடாமல் இருக்க வேண்டும். பொய் சொல்லாமல் இருக்க வேண்டும். தகப்பனையும், தாயையும் கனம் பண்ணவேண்டும் மேலும், உன்னைப் போல மற்றவனையும் நேசிக்க வேண்டும் என்றார்.

OBS Image

அதற்கு அந்த வாலிபன், என் சிறுவயதிலிருந்து நான் இந்தக் கற்பனைகளின்படி தான் இருக்கிறேன். நான் சாகாதிருக்கும்படி நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். இயேசு அவனை நோக்கி அன்பு கூர்ந்தார்.

OBS Image

இயேசு அவனிடத்தில், நீ சுத்தனாய் இருக்க விரும்பினால், உனக்கு உள்ள எல்லாவற்றையும் விற்று, ஏழைகளுக்கு கொடுத்து விடு, அப்போது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றும்படி வா என்றார்.

OBS Image

இயேசு சொன்னதை அந்த வாலிபன் கேட்டதும், தனக்கு அநேக செல்வங்கள் இருந்ததினால், அதை மற்றவர்களுக்குக் கொடுக்க மனதில்லாமல், மிகுந்த துக்கமடைந்தவனாய் இயேசுவை விட்டுப் போய்விட்டான்.

OBS Image

இயேசு தம்முடைய சீஷர்களைப் பார்த்து, பணக்காரர்கள் பரலோகராஜ்யத்திற்கு போவது மிகவும் கடினம்! ஆம் பணக்காரர்கள். பரலோகராஜ்யத்திற்கு போவது, ஊசியின் காதில் ஒட்டகம் போவது போன்றது என்றார்.

OBS Image

இயேசு சொன்னதை சீஷர்கள் கேட்டு, அதிர்ச்சியடைந்து, அப்படியானால் தேவன் யாரைக் காப்பாற்றுவார் என்றனர்.

OBS Image

இயேசு, சீஷர்களைப் பார்த்து, மனிதர்கள் தங்களைக் காப்பாற்றுவது கடினம், ஆனால் தேவனால் கூடாதகாரியம் ஒன்றும் இல்லை என்றார்.

OBS Image

பேதுரு இயேசுவினிடத்தில், சீஷர்களாகிய நாங்கள், எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மை பின்பற்றுகிறோம், எங்களுக்கு என்ன கிடைக்கும்? என்றான்.

OBS Image

எவன் ஒருவன் தன் வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதிரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, குழந்தைகளையாவது, சொத்தையாவது , 1 மடங்கு அதைவிட அதிகமாக நித்தியத்தில் பெறுவான். முன்பாக வருகிறவர்கள் கடைசியிலும், கடைசியில் வருகிற அநேகர் முதலிலும் இருப்பார்கள் என்று இயேசு சொன்னார்.

வேதாகம கதை: மத்தேயு19:16-30; மாற்கு10:17-31; லூக்கா18:18-30