ta_obs/content/24.md

42 lines
6.1 KiB
Markdown

# 24. யோவான் இயேசுவை ஸ்நானம்பண்ணுதல்
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-24-01.jpg)
சகரியாவுக்கும், எலிசபெத்துக்கும் பிறந்த யோவான், வளர்ந்து பெரியவனாகி, ஒரு தீர்கத்தரிசி ஆனான். வெட்டுக்கிளியையும், காட்டுத்தேனையும் சாப்பிட்டு, ஒட்டக முடியினால் செய்யப்பட்ட உடை அணித்து, வனாந்திரத்தில் வாழ்ந்தான்.
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-24-02.jpg)
அநேக ஜனங்கள் அவன் சொல்வதைக் கேட்கும்படி வனாந்திரத்திற்கு போனார்கள். மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்ஜியம் சமீபமாய் இருக்கிறது என்று பிரசங்கித்தான்.
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-24-03.jpg)
யோவானின் பிரசங்கத்தைக் கேட்ட அநேகர், தங்கள் பாவங்களை விட்டு மனந்திரும்பினர். அவர்களுக்கு யோவான் ஸ்நானம் கொடுத்தான். அநேக மதத்
தலைவர்களும் யோவானைப் பார்க்கும்படி வந்தனர், ஆனால் அவர்கள் பாவங்களை சொல்லவோ, மனந்திரும்பவோ இல்லை.
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-24-04.jpg)
மதத் தலைவர்களிடம் யோவான் சொன்னது, விரியன் பாம்புகளே! மனந்திரும்பி, ஒழுக்கமாய் இருங்கள். தேவன் கனி கொடுக்காத எல்லா மரங்களையும் வெட்டி, அக்கினியிலே போடுவார் என்றான். உமக்கு முன்னே போய், வழியை ஆயத்தம் செய்வான், என்று தீர்கத்தரிசிகள் சொன்னதை யோவான் நிறைவேற்றினான்.
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-24-05.jpg)
யோவான், மேசியாவோ என்று மதத் தலைவர்கள் சிலர் அவனிடம் கேட்டனர். அவன், நான் மேசியா இல்லை, எனக்குப்பின் வருகிறவர் என்னைவிட பெரியவர். அவருடைய செருப்பின்வாரை எடுத்து விடுவதற்குகூட, நன் பாத்திரவான் இல்லை என்றான்.
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-24-06.jpg)
அடுத்தநாள், இயேசு ஸ்நானம் பெற்றுக்கொள்ளும்படி யோவானிடம் வந்தார். யோவான் அவரை பார்த்ததும், பாருங்கள்! இவரே தேவ ஆட்டுக்குட்டி, உலகத்தின் பாவங்களை நீக்குகிறவர் என்றான்.
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-24-07.jpg)
யோவான், இயேசுவிடம், நான் உமக்கு ஸ்நானம் கொடுக்க பாத்திரவான் இல்லை, நீர் எனக்கு ஸ்நானம் கொடுக்க வேண்டும் என்று சொன்னான். அதற்கு இயேசு, நீ எனக்கு ஸ்நானம் கொடுப்பது தான் சரி, ஸ்நானம் கொடு என்றார், அவர் பாவம் செய்யாதிருந்தும், யோவான் அவரை ஸ்நானம் பண்ணினான்.
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-24-08.jpg)
இயேசு, ஸ்நானம் எடுத்து முடித்து, தண்ணீரிலிருந்து வெளியே வரும்போது, பரிசுத்த ஆவியானவர் புறாவைப் போல் அவர்மேல் இறங்கினார். அதே சமயம், வானத்திலிருந்து தேவன் பேசினார், அதாவது, நீ என்னுடைய மகன், நான் உன்னை நேசிக்கிறேன் மேலும் உன்னில் பிரியமாயிருக்கிறேன் என்றார்.
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-24-09.jpg)
தேவன், யோவானிடம், நீ ஸ்நானம் பண்ணும் ஒருவர் மேல் பரிசுத்த ஆவி இறங்குவார். அவரே தேவனுடைய மகன் என்றார். தேவன் ஒருவரே. ஆனால், யோவான், இயேசுவை ஸ்நானம் பண்ணினதும், பிதாவாகிய தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, அவருடைய மகனாகிய இயேசுவைப் பார்த்து, பரிசுத்த ஆவியையும் பார்த்தான்.
_வேதாகம கதை: மத்தேயு 3; மாற்கு 1:9-11; லூக்கா 3:1-23_