ta_obs/content/18.md

8.8 KiB
Raw Permalink Blame History

18. ராஜ்ஜியம் பிரிக்கப்படுதல்

OBS Image

ராஜாவாகிய தாவீது நாற்பது வருடம் தேசத்தை ஆண்டு மரித்தப் பின்பு, அவனுடைய மகன் ராஜாவானான். தேவன் சாலமனிடம் பேசி, உனக்கு என்ன நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு, அவன் எனக்கு நியாணத்தைத் தர வேண்டும் என்று கேட்டான். அது தேவனுக்கு பிரியமாயிருந்தது. அவர் சாலமனை உலகின் நியாணியாக்கினார். அநேக காரியங்களைக் கற்றான், தேவன் அவனை மென்மேலும் ஆசீர்வதித்தார்.

OBS Image

எருசலேமில், தாவீது கட்டும்படி நினைத்து, சேர்த்து வைத்திருந்த பொருட்களைக் கொண்டு தேவனுக்கு ஆலயத்தைக் கட்டினான். அதுவரை ஜனங்கள் ஆசரிப்புக் கூடாரத்தில் பலி செலுத்தி வந்தனர். கட்டின ஆலயத்தில் தேவன் தங்கியிருந்தார், ஜனங்களும் அங்கே தேவனுக்கு ஆராதனை செய்து, பலி செலுத்தினர்.

OBS Image

ஆனால், மற்ற தேசங்களிலிருந்து அநேக பெண்களை நேசித்தான். தேவனுக்குக் கீழ்ப்படியாமல் மற்ற தேசங்களிலிருந்து 1-க்கும் மேலான பெண்களை திருமணம் செய்து, அவர்களுடைய விக்ரகங்களையும் வணங்க ஆரம்பித்தான். சாலமனுக்கு வயதான போனதும் அவர்களுடைய தேவர்களை வணங்கினார்.

OBS Image

தேவன் னின் மேல் கோபமடைந்து, இஸ்ரவேலின் ராஜ்யத்தை இரண்டாகப் பிரித்து அவனை தண்டிப்பேன் என்றார். இதை மரித்தபின்பு செய்வதாக சொன்னார்.

OBS Image

மரித்த பின்பு, அவனுடைய மகன் ரெகொபெயாம் இஸ்ரவேலில் ராஜாவானான். ஜனங்களெல்லாரும் அவனை ராஜாவாக ஏற்றுக் கொண்டனர். தேசத்தின் எல்லா மக்களும் ராஜாவாகிய ரெகொபெயாமினிடத்தில் வந்து, உம்முடைய தகப்பன் எங்களுக்கு கடினமான வேலைகளைத் தந்து, அதிகமான வரியையும் கொடுக்க சொன்னார். எங்களுடைய வேலையை ரெகொபெயாம் குறைக்கும்படி சொன்னார்கள்.

OBS Image

ஆனால் ரெகொபெயாம் மிகவும் முட்டாள்தனமாக ஜனங்களுக்கு பதில் சொன்னான். நீங்கள் சொன்னபடி, என்னுடைய தகப்பனாகிய உங்களை கடினமாய் வேலை செய்யும்படி செய்தார். ஆனால் நான் உங்களை அதிலும் கடினமான வேலை செய்யும்படி செய்வேன் என்றான்.

OBS Image

இப்படி அவன் சொன்னதினால், ஜனங்கள் அவனுக்கு விரோதமாய் திரும்பினர். பத்துக் கோத்திரத்தாரும் அவனை விட்டு விலகினர் கடைசியில் இரண்டு கோத்திரத்தார் மட்டும் அவனோடு இருந்தனர். அதைத்தான் யூததேசம் என்று அழைத்தனர்.

OBS Image

மற்ற பத்துக் கோத்திரங்களுக்கும் யேரோபெயாம் என்பவன் ராஜாவானான். இவர்கள் வடக்கு பகுதியில் இருந்தனர். அவர்கள் தங்களை இஸ்ரவேல் என்று பெயர் வைத்துக் கொண்டனர்.

OBS Image

ஆனால் யேரோபெயாம் ஜனங்களை தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்ய வைத்தான். அவன் இரண்டு சிலையை உண்டு பண்ணி, ஜனங்களை வணங்க வைத்தான். அதினால் அவர்கள் எருசலேமின் தேவாலயத்திற்கு சென்று தேவனை ஆராதிப்பதை நிறுத்தி விட்டனர்.

OBS Image

யூதா மற்றும் இஸ்ரவேல் தேசமும் ஒருவருக்கொருவர் விரோதமாய் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டனர்.

OBS Image

புதிய இஸ்ரவேல் ராஜ்யத்தில் இருந்த எல்லா ராஜாக்களும் கெட்டவர்கள். இவர்களில் அநேகர், இஸ்ரவேலில் ராஜாவாக நினைத்த மற்றவர்களால் கொலை செய்யப்பட்டனர்.

OBS Image

எல்லா ராஜாக்களும், ஏறக்குறைய எல்லா ஜனங்களும் இஸ்ரவேலில் விக்ரகங்களை வணங்கினர். இதை அவர்கள் செய்த போது, அதிகமாய் விபச்சாரம் செய்து, சில நேரங்களில் தங்களுடைய பிள்ளைகளைக்கூட அந்த விக்கிரகங்களுக்கு படைத்தனர்.

OBS Image

தாவீதின் சந்ததியான யூதா தேசத்தின் ராஜாக்களில் சிலர் நியாயமாய் ஜனங்களை நடத்தி, தேவனை ஆராதித்தனர். ஆனால் பெரும்பாலான யூத ராஜாக்கள் கெட்டவர்கள். அவர்கள் அநியாயமாய் ஜனங்களை நடத்தி, விக்ரகங்களை வணங்கி, அதிலும் சில ராஜாக்கள் அவர்களுடைய பிள்ளைகளை கடவுள் அல்லாதவைகளுக்கு பலிசெலுத்தினார்கள். பெரும்பாலான ஜனங்கள் விக்ரகங்களை வணங்கி, தேவனுக்கு விரோதமானதை செய்தார்கள்.

வேதாகம கதை: 1 ராஜாக்கள் 1-6; 11-12