ta_obs/content/15.md

10 KiB

15. தேசம்

OBS Image

இஸ்ரவேலருக்கு வாக்குபண்ணபட்ட தேசமாகிய கானானுக்குள் போகும் சமயத்தில், எரிகோ என்ற நகரம் இருந்தது. அந்த நகரத்தை பாதுகாக்க அதைச் சுற்றிலும் மிகவும் வலிமையான மதில்கள் இருந்தது. இரண்டு மனிதர்களை யோசுவா வேவு பார்க்கும்படி அங்கே அனுப்பினான், அந்த நகரத்தில் விபச்சாரியான ஒரு பெண் இருந்தாள். அவள் தேவனை நம்பினபடியால் அந்த இரண்டு பேரையும் ஒத்துவைத்து, பின்பு அவர்கள் தப்பிப்போகும்படி உதவினாள். எனவே அந்த இருவரும் எரிகோ பட்டணம் அழிக்கப்படும் போது அந்த ராகாபையும், அவள் குடும்பத்தையும் விட்டு விடுவதாக உறுதியளித்தனர்.

OBS Image

வாக்குபண்ணபட்ட தேசத்திற்கு போவதற்கு யோர்தான் நதியை கடக்க வேண்டியிருந்தது. யோசுவாவிடம் தேவன் ஆசாரியர்களை முன்பாக அனுப்பும்படி சொன்னார். ஆசாரியர்களின் கால்கள் யோர்தானில் பட்டவுடனே தண்ணீர் விலகி இஸ்ரவேலர்கள் கடந்து போகும்படி வெட்டாந்தரையைப் போல் ஆயிற்று.

OBS Image

இஸ்ரவேலர் யோர்தான் நதியை கடந்ததும், எரிகோ பட்டணத்தார் மிகவும் பலசாலிகளாயிருந்தும் அவர்களோடு யுத்தஞ்செய்யப் புறப்படும்படி தேவன் யோசுவாவோடு சொன்னார். இஸ்ரவேலின் ஆசாரியர்களும், யுத்தவீரர்களும் ஒரு நாள் ஒருதரம் என்ற கணக்கின்படி ஆறு நாளும் எரிகோ பட்டணத்தை சுற்றும்படி சொன்னார். அவர்கள் அப்படியே செய்தனர்.

OBS Image

பின்பு ஏழாம் நாளில், இஸ்ரவேலர்கள் ஏழுதரம் சுற்றினர். ஏழுமுறை சுற்றி முடித்தப் பின்பு, ஆசாரியர்கள் எக்காளம் ஊதினர், யுத்த வீரர்களும் சத்தமாய் ஆர்ப்பரித்தனர்.

OBS Image

எனவே எரிகோவின் சுவர்கள் இடிந்து விழுந்தது. உடனே தேவன் இஸ்ரவேலர்களுக்குக் கட்டளையிட்டபடி அவர்கள் அதிலுள்ள எல்லாவற்றையும் அழித்தனர். ராகாபையும் அவள் குடும்பத்தையும் தப்ப விட்டனர், அவளும் இஸ்ரவேலரின் கூட்டத்தில் சேர்ந்தாள். கானானில் வாழ்ந்த மற்ற ஜனங்கள் இஸ்ரவேலர் எரிகோவின் பட்டணத்தை அழித்துப் போட்ட செய்தியைக் கேட்டு, அவர்களையும் இஸ்ரவேலர்கள் அழிப்பார்கள் என்று மிகவும் பயந்தனர்.

OBS Image

கானானில் இருக்கும் எந்த ஜனத்தாருடனும் சேரக்கூடாது என்று தேவன் இஸ்ரவேலருக்குக் சொல்லியிருந்தார். ஆனால் கானானில் இருந்த கிபியோனியர் யோசுவாவிடம், தாங்கள் தூரதேசத்தார் என்று பொய் சொல்லி, சமாதான ஒப்பந்தம் செய்யும்படி கேட்டனர். ஆனால் யோசுவாவும், இஸ்ரவேல் தலைவர்களும், கிபியோனியரிடம் சமாதான ஒப்பந்தம் செய்தனர்.

OBS Image

மூன்று நாட்களுக்குப்பின் கிபியோனியர் கானானில் வாழ்கிறவர்கள் என்ற செய்தியை இஸ்ரவேலர்கள் கேள்விப்பட்டு, தங்களை ஏமாற்றியதினால் மிகவும் கோபமடைந்தனர். தேவனுக்கு முன்பாக சமாதனம் செய்ததினால் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. சில நாட்களுக்குப்பின் இஸ்ரவேலருடன், கிபியோனியர் சமாதான ஒப்பந்தம் செய்ததை கானானில் வாழ்ந்த சில அம்மோனிய ராஜாக்கள் கேள்விப்பட்டு, மிகப்பெரிய கூட்டமாய் வந்து கிபியோனியரோடு சண்டையிட்டனர். தங்களுக்கு உதவும்படி கிபியோனியர் யோசுவாவுக்கு சொல்லி அனுப்பினர்.

OBS Image

எனவே யோசுவா, இஸ்ரவேலின் ராணுவத்தை சேர்த்து, இரவு முழுவதும் நடந்து கிபியோனியர் இருக்கும் இடத்திற்கு வந்து, அதிகாலையில் அம்மோனியர் ஆச்சரியப்பட அவர்களிடம் சண்டையிட்டனர்.

OBS Image

அன்று தேவன் இஸ்ரவேலுக்காக யுத்தம் செய்தார். அம்மோனியர்கள் மனதை குழப்பி, வானத்திலிருந்து பெரிய கற்களை விழும்படிச் செய்து அநேக அம்மோனியரை கொன்றுபோட்டார்.

OBS Image

இஸ்ரவேலர் அம்மோனியரை முற்றிலுமாய் ஜெயிக்கும்படி, தேவன் சூரியனை அப்படியே நிற்கும்படிச் செய்தார். இஸ்ரவேலருக்கு தேவன் மாபெரும் வெற்றியைத் தந்தார்.

OBS Image

அவர்களுடைய ராணுவத்தை தேவன் தோற்கடித்ததினால், கானானில் இருந்த மற்ற ஜனங்களும் சேர்ந்து இஸ்ரவேலுக்கு விரோதமாய் வந்தனர். யோசுவாவும், இஸ்ரவேலர்களும் அவர்களை முறியடித்தனர்.

OBS Image

இந்த யுத்தம் முடிந்தபின்பு, வாக்குபண்ணபட்ட தேசத்தில் இஸ்ரவேலின் ஒவ்வொரு கோத்திரங்களுக்கும் தேவன் இடங்களை பகிர்ந்து கொடுத்தார். அதன்பிறகு இஸ்ரவேலருக்கு அவர்கள் எல்லையில் சமாதானத்தைத் தந்தார்.

OBS Image

யோசுவாவுக்கு வயதானபோது, அவன் இஸ்ரவேலர் எல்லோரையும் அழைத்து, சீனாய் மலையில் தேவன் அவர்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுபடுத்தி, தேவனுக்குக் கீழ்ப்படியவும், அவருடைய கற்பனைகளின்படி செய்யவும் சொன்னான்.

வேதாகம கதை: யோசுவா 1-24