ta_obs/content/13.md

11 KiB

13. இஸ்ரவேலோடு தேவனின் உடன்படிக்கை

OBS Image

தேவன் இஸ்ரவேலரை செங்கடல் வழியாய் நடத்தின பின்பு, அவர்களை வனாந்திர வழியாய் சீனாய் மலைக்கு நேராய் வழி நடத்தினார். இந்த மலையில் தான் தேவன் மோசேக்கு எரிகிற முட்செடியில் தரிசனமானார். மலையின் அடிவாரத்தில் ஜனங்கள் தங்களுடைய கூடாரத்தைப் போட்டனர்.

OBS Image

நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து, நான் கொடுக்கும் என் கட்டளைகளுக்கு செவிகொடுத்தால், நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும், பரிசுத்த ஜாதியாயும் இருப்பீர்கள் என்று தேவன் மோசேயோடும், இஸ்ரவேலரோடும் சொன்னார்.

OBS Image

தேவன் இஸ்ரவேலர்களை சந்திக்கும்படி, மூன்று நாட்கள் அவர்கள் தங்களை ஆயத்தபடுத்தினப் பின்பு, தேவன் சீனாய் மலையில் இறங்கினார். அப்பொழுது இடி, மின்னல், புகை மற்றும் எக்கால சத்தம் உண்டாயிற்று, பின்பு மோசே மலையின் மேல் ஏறிப்போனான்.

OBS Image

பின்பு தேவன் ஜனங்களோடு உடன்படிக்கைச் செய்து, அவர் சொன்னது, நான் யேகோவா. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கின உங்களுடைய தேவன். என்னை அல்லாமல் வேறே தேவர்களை சேவிக்க வேண்டாம் என்பதே.

OBS Image

நான் யேகோவா. என்னை அல்லாமல், வேறே தேவர்களை உங்களுக்கு உண்டாக்கவும் அதை வணங்கவும் வேண்டாம். ஓய்வு நாளை பரிசுத்தமாய் ஆசரிக்கவும், அவர்களுடைய வேலைகளை மற்ற ஆறு நாட்களில் செய்யவும் கட்டளையிட்டார். ஓய்வு நாளில் ஓய்ந்திருக்கவும், என்னை நினைவுகூறவும் வேண்டுமென்று சொன்னார்.

OBS Image

தாயையும், தகப்பனையும் கனம்பண்ணு, விபச்சாரம் செய்யாதே, திருடாதே, பொய்சொல்லாதே, மற்றவனுடைய மனைவியையாவது, வீட்டையாவது, அவனுக்குச் சொந்தமான எந்த பொருளையாவது இச்சியாதே.

OBS Image

பின்பு தேவன் இரண்டு கற்பலகைகளில் பத்துக் கற்பனைகளை எழுதி மோசேயினிடத்தில் கொடுத்தார். மேலும் அநேக விதிமுறைகளையும் தேவன் அவர்களுக்குக் கொடுத்தார். இவைகளை அவர்கள் கைக்கொண்டு கீழ்ப்படிந்தால் அவர்களை ஆசீர்வதிப்பதாகவும், இல்லையெனில் அவர்களைத் தண்டிப்பதாகவும் அவர்களுக்கு வக்குப்பண்ணினார்.

OBS Image

பெரிய கூடாரத்தை உண்டாக்கும்படி தேவன் சொன்னார். அதை எப்படிச் செய்ய வேண்டும் என்றும் அவர்களுக்குச் சொன்னார். அந்தக் கூடாரத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கவும், அதில் ஒன்றில் தேவன் வாசம்பண்ணவும், அங்கே பிரதான ஆசாரியன் மட்டுமே போக முடியும் என்பதையும் சொன்னார்.

OBS Image

கூடாரத்திற்கு முன்பாக ஒரு பலிபீடம் கட்டவேண்டும், கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாதவன் எவனோ அவன் மிருகஜீவன்களை பலிபீடத்திற்கு கொண்டுவர வேண்டும், அதை பிரதான ஆசாரியன், பலிசெலுத்தி, தீயினால் சுட்டெரிக்க வேண்டும். அது அவர்களை சுத்தமாக்கும். தேவன் ஜனங்களின் பாவங்களை நினையாதிருக்க, இப்படிச் செய்யும்படி சொன்னார். தேவன் மோசேயின் சகோதரனான ஆரோனின் சந்ததியை அவருக்கு ஆசாரியராய் இருக்கும்படித் தெரிந்துகொண்டார்.

OBS Image

அவர் ஒருவருக்கே ஆராதனை செய்யவும், அவருடைய ஜனமாக இருக்கவும், தேவன் ஜனங்களுக்குத் தந்த எல்லா கற்பனைகளின்படி செய்யவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

OBS Image

வெகு நாட்கள் மோசே சீனாய் மலையில் தேவனோடு பேசிக்கொண்டிருந்ததினால், ஜனங்கள் அவன் திரும்பிவர காத்திருந்து சோர்ந்துபோய், தங்களுடைய ஆபரணங்களை ஆரோனிடத்தில் கொடுத்து, அவர்கள் ஆராதிக்கும்படி ஒரு சிலையை உண்டாக்கும்படி கேட்டுக் கொண்டனர். இப்படி தேவனுக்கு விரோதமா பாவம் செய்தனர்.

OBS Image

ஆரோன் தங்கத்தினாலான ஒரு கன்றுக்குட்டியை செய்தான், அதை ஜனங்கள் எல்லோரும் வணங்கி, அதற்கு பலிசெலுத்தினர்! அவர்களுடைய செய்கையினால் தேவன் மிகவும் கோபமடைந்து அவர்களை அழிக்கும்படி நினைத்தார். ஆனால் மோசே ஜனங்களை அழிக்காதபடிக்கு தேவனிடத்தில் ஜெபித்தான். அவனுடைய ஜெபத்தைக் கேட்டு தேவன் அவர்களை அழிக்கவில்லை.

OBS Image

மோசே சீனாய் மலையிலிருந்து தேவன் கற்பலகையில் எழுதிக்கொடுத்த பத்துக் கட்டளைகளை கையில் எடுத்துக்கொண்டு இறங்கி வரும்போது, அந்த சிலையைப் பார்த்து மிகவும் கோபமடைந்து, உடைத்துப்போட்டான்.

OBS Image

பின்பு மோசே அந்தச் சிலையை உடைத்து, அதின் பொடிகளை நீரில் வீசினான், அதை ஜனங்கள் தேவன் வாதையை அனுப்பினார் எனவே அநேக ஜனங்கள் மரித்துப்போயினர்.

OBS Image

மோசே தான் உடைத்த கற்பலகைகள் போன்று மறுபடியும் செய்து பத்துக் கற்பனைகளை எழுதும்படி மலையின்மேல் ஏறிப்போனான். அங்கே தேவன் ஜனங்களை மன்னிக்கும்படி ஜெபித்தான். தேவன் அவனுடைய ஜெபத்தைக் கேட்டு, அவர்களை மன்னித்தார். பின்பு பத்துக் கற்பனைகளுடன் மலையிலிருந்து கீழே வந்தான். அதன்பிறகு, சீனாய் மலையிலிருந்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு நேராய் தேவன் இஸ்ரவேலரை நடத்தினார்.

வேதாகம கதை: யாத்திராகமம் 19-34