ta_obs/content/12.md

8.9 KiB

12. யாத்திராகமம்

OBS Image

இஸ்ரவேலர்கள் இனி தாங்கள் அடிமைகள் இல்லை என்பதினால் மிகவும் சந்தோஷமாக எகிப்தை விட்டு வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு புறப்பட்டனர். இஸ்ரவேலர் கேட்ட வெள்ளி, பொன், மேலும் விலையுயர்ந்த பொருட்களையும்கூட எகிப்தியர் கொடுத்தனர். மற்ற தேசத்தாரும் தேவனில் நம்பிக்கை வைத்து இஸ்ரவேலரோடுகூட எகிப்திலிருந்து புறப்பட்டனர்.

OBS Image

பகலில் மேகஸ்தம்பமும், இரவில் அக்கினிஸ்தம்பமும் அவர்களுக்கு முன்பாகச் சென்றது. தேவன் இஸ்ரவேலருக்கு மேகஸ்தம்பமாகவும், அக்கினிஸ்தம்பமாகவும் அவர்களோடு இருந்து சென்ற வழியில் நடத்தினார். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் தேவனைப் பின்தொடர்வது மட்டுமே.

OBS Image

கொஞ்ச நேரத்தில் பார்வோனும், அவனுடைய ஜனங்களும் மனம் மாறி இஸ்ரவேலரை அவர்களுக்கு அடிமைகளாக்கும்படி மறுபடியும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். தேவனே அவர்களின் சிந்தனையை மாற்றினார். எகிப்தின் தேவர்களைக் காட்டிலும் யேகோவா, ஒருவரே வல்லமையில் பெரியவர் என்று பார்வோன் அறியும்படி தேவன் இப்படி செய்தார்.

OBS Image

எகிப்தின் ராணுவம் அவர்களைப் பின்தொடர்வதை கண்ட இஸ்ரவேலர்கள், தாங்கள் செங்கடலுக்கும், பார்வோனின் ராணுவத்துக்கும் இடையில் மாட்டிக்கொண்டதாக நினைத்து மிகவும் பயந்து, நாம் ஏன் எகிப்திலிருந்து புறப்பட்டோம்? நாம் சாகப்போகிறோம் என்றனர்.

OBS Image

பயப்படாதிருங்கள்! தேவன் நமக்காய் யுத்தம் செய்வார் என்று மோசே இஸ்ரவேலரிடம் சொன்னான். பின்பு தேவன் அவர்களை செங்கடலுக்கு அருகில் போகும்படி சொன்னார்.

OBS Image

பின்பு தேவன் மேகஸ்தம்பத்தை இஸ்ரவேலருக்கும் எகிப்தியருக்கும் இடையில் நிற்கப்பண்ணினார். எனவே அவர்களால் இஸ்ரவேலரைப் பார்க்க முடியவில்லை.

OBS Image

செங்கடலுக்கு எதிராக தன் கையை நீட்டும்படி தேவன் மோசேயிடம் சொன்னார். அவன் செய்தபோது பலத்த கற்றை வரும்படிச் செய்து, வெள்ளம் வலது, இடது பக்கத்தில் குவியலாக நின்றது. அதினால் செங்கடலில் இஸ்ரவேலருக்கு வழி கிடைத்தது.

OBS Image

செங்கடலில் இரண்டு பக்கத்திலும் சுவர் போல நின்ற வெள்ளத்தினால் வேட்டாந்தரைபோல் இஸ்ரவேலருக்கு வழி உண்டாயிற்று.

OBS Image

தேவன் இடையில் இருந்த மேகஸ்தம்பத்தை விலக்கியதினால், இஸ்ரவேலர்கள் தப்பித்து போகிறதை எகிப்தியர்கள் கண்டு, அவர்களைப் பின்தொடர்ந்தனர்.

OBS Image

எகிப்தியர், இஸ்ரவேலர்கள் சென்ற அதே கடல் வழியாய் அவர்களைத் பின் தொடர்ந்தனர். ஆனால் தேவன் அவர்கள் பயந்து போகும்படி, அவர்களுடைய குதிரைகளின் இரதங்களை சிக்கிக்கொள்ளும்படிச் செய்தார். அப்பொழுது எகிப்தியர் நாம் இஸ்ரவேலரை விட்டு ஓடிப்போவோம். தேவன் அவர்களுக்காய் யுத்தம் செய்கிறார் என்றனர்.

OBS Image

இஸ்ரவேலர்கள் எல்லோரும் கரையேறினவுடனே, ஜலம் எகிப்தியர்மேல் திரும்பும்படி, மேசேயின் கையை கடலின்மேல் நீட்டும்படி தேவன் சொன்னார். மோசே அதைச் செய்தபோது, ஜலம் எகிப்தியர்மேல் புரண்டு அவர்களை மூடிப்போட்டது.

OBS Image

எகிப்தியர்கள் செத்துக்கிடக்கிறதை இஸ்ரவேலர்கள் பார்த்து, தேவனை நம்பினார்கள். தேவனுடைய ஊழியக்காரனான மோசேயையும் நம்பினார்கள்.

OBS Image

தேவன் இஸ்ரவேலரை இரட்சித்து, அவர்களை அடிமைத்தனத்திலிருந்தும், எகிப்தின் இராணுவத்திற்கும் தப்புவித்ததை நினைத்து மிகவும் மகிழ்ந்து, தேவனுக்குக் கீழ்ப்படிந்து, அவரைப் புகழ்ந்து பாட்டுகளை பாடினார்கள்.

OBS Image

தேவன் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து விடுவித்து, எகிப்தியரைத் தோற்கடித்ததை நினைவுகூறும்படி ஒவ்வொரு வருடமும் பண்டிகையைக் கொண்டாடும்படி கட்டளைக் கொடுத்தார். அதைத் தான் பஸ்கா பண்டிகை என்கிறோம். அந்நாளில் கொண்டாடவேண்டிய விதமாவது, பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியை அடித்து, சுட்டு, புளிப்பில்லாத மாவினால் செய்யப்பட்ட அப்பத்துடன் சாப்பிடவேண்டும்..

வேதாகம கதை 12:33-15:21