ta_obs/content/10.md

7.2 KiB
Raw Permalink Blame History

10. பத்து வாதைகள்

OBS Image

மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில், என் ஜனங்களைப் போக விடு என்று இஸ்ரவேலின் தேவன் சொல்லுகிறார் என்று கூறியதும், போகவிடாமல், அவர்களுடைய வேலையை இன்னும் பாரமாக்கினான். அவன் செவிகொடுக்க மாட்டான் என்று தேவன் முன்னமே சொல்லியிருந்தார்.

OBS Image

பார்வோன் தொடர்ந்து அவர்களை போகவிடாதிருக்கையில், தேவன் பத்து வாதைகளை எகிப்தில் வரப்பண்ணி, தான் எகிப்தின் தேவர்களிலும் வல்லமையுள்ள தேவன் என்று பார்வோன் அறியும்படி செய்தார்.

OBS Image

தேவன் நயல் நதியை இரத்தமாகும்படி செய்தார் ஆனாலும் பார்வோன் இஸ்ரவேலரை போகவிடவில்லை.

OBS Image

தேவன் எகிப்து முழுவதும் தவளைகள் வரும்படி செய்தார், பார்வோன் மோசேயிடம் தவளைகளை போக செய்யும்படி வேண்டினான். ஆனால் அவைகள் மரித்துப்போன பின்பு பார்வோன் தன்னுடைய இருதயத்தை கடினப்படுத்தி, இஸ்ரவேலரை போகவிடவில்லை.

OBS Image

எனவே தேவன் எகிப்து முழுவதும் பேன்களை வரும்படிச் செய்தார். பின்பு ஈக்களையும் வரும்படிச் செய்தார். பார்வோன் மோசே, ஆரோன் என்பவர்களை அழைத்து, இந்த வாதைகள் நிறுத்தினால், இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து போகலாம் என்றான். மோசே ஜெபித்தபோது, தேவன் வாதைகளை நிறுத்தினார், ஆனால் பார்வோன் தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்தி அவர்களை விடவில்லை.

OBS Image

பின்பு, தேவன் எகிப்தியரின் மிருகஜீவன்களையெல்லாம் நோயினால் சாகும்படிச் செய்தார். ஆனாலும் பார்வோனின் இருதயம் கடினப்பட்டு, இஸ்ரவேலரை போகவிடவில்லை.

OBS Image

பின்பு தேவன், பார்வோனுக்கு முன்பாக சாம்பலைக் காற்றில் தூவும்படி கூறினார். அவன் அப்படி செய்தபோது, வலி நிறைந்த புண்கள் எகிப்தியரின்மேல் மட்டும் வரும்படிச் செய்தார், தேவன் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தியதினால், அவன் இஸ்ரவேல் ஜனங்களைப் போகவிடவில்லை.

OBS Image

அதற்கு பின்பு, தேவன் கல் மழையை வரும்படி செய்தார். அது எகிப்தின் எல்லா பயிர்களையும் அழித்துப்போட்டது, மேலும் வெளியே சென்ற எகிப்தியர் யாவரையும் கொன்றுபோட்டது. பார்வோன் மோசேயும் ஆரோனையும் அழைத்து நான் பாவம் செய்தேன், நீங்கள் புறப்பட்டுப்போங்கள் என்றான், எனவே மோசே ஜெபித்தான், வானத்திலிருந்து பெய்த கல் மழை நின்றது.

OBS Image

ஆனால் பார்வோன் மீண்டும் பாவம் செய்து, அவனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தி இஸ்ரவேலரை போகவிடவில்லை.

OBS Image

எனவே தேவன் திரளான வெட்டுக்கிளிகளை எகிப்து முழுவதும் வரும்படிச் செய்தார். அது கல் மழையினால் அழியாத எல்லா பயிர்களையும் தின்றுபோட்டது.

OBS Image

பின்பு தேவன் எகிப்தியரின்மேல் கடும் இருளை வரப்பண்ணினார், அது மூன்று நாட்கள் இருந்ததினால் எகிப்தியரால் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே போகமுடியாதிருந்தது, ஆனால் இஸ்ரவேலர்கள் இருந்த இடத்தில் வெளிச்சமாக இருந்தது.

OBS Image

இந்த ஒன்பது வாதைகளை வரப்பண்ணியும், பார்வோன் இஸ்ரவேலரை விடுதலையாய் போகவிடாததினால், பார்வோனுடைய இருதயம் மாறும்படி தேவன் மேலும் ஒரு வாதையை அவர்கள்மேல் வரப்பண்ணினார்.

வேதாகம கதை: யாத்திராகமம் 5-1