ta_obs/content/07.md

6.7 KiB

7. தேவன் யாக்கோபை ஆசீர்வதித்தல்

OBS Image

அவர்கள் இருவரும் வளர்ந்து பெரியவர்களானபோது, யாக்கோபு வீட்டிலே தங்கி இருப்பதை விரும்பினான்,ஏசா வேட்டையாடுவதில் வல்லவனானான். ரெபெக்காள் யாக்கோபை மிகவும் நேசித்தாள், ஈசாக்கு ஏசாவை நேசித்தான்.

OBS Image

ஒருநாள் ஏசா வேட்டையாடி முடித்து வீடு திரும்பியதும் அவனுக்கு மிகவும் பசி உண்டாயிற்று, எனவே அவன் யாக்கோபினிடத்தில் நீ சமைத்ததில் கொஞ்சம் எனக்கு கொடு என்றான். அதற்கு யாக்கோபு, முதலில் அவனுடைய சேஷ்டபுத்திரபாகத்தைத் தருபடி கேட்டான், ஏசாவும் அப்படியே சம்மதிததான். பின்பு யாக்கோபு அவனுக்குக் கொஞ்சம் உணவு கொடுத்தான்.

OBS Image

ஈசாக்கு தான் மரணமடையுமுன்னே மூத்தக் குமாரனாகிய ஏசாவை ஆசீர்வதிக்க விரும்பினான், ஆனால் ரெபெக்காளும் யாக்கோபும் தந்திரமாய் ஏசாவின் உடலில் உள்ள ரோமத்தை போல் ஆட்டுத்தோலை கைகளிலும், கழுத்திலும் உடுத்தி, வயதின் காரணமாய் ஈசாக்கின் கண்கள் இருளடைந்தததினால் அவனை வஞ்சித்தனர்.

OBS Image

யாக்கோபு தன் தகப்பனிடத்தில் வந்து நான் உம்முடைய குமாரனாகிய ஏசா என்றான். அவனுடைய தோல் ஆட்டுத்தோலைப் போலிருந்து வாசனை வீசியதில் அவன் ஏசா என்று நினைத்து ஆசீர்வதித்தான்.

OBS Image

ஏசா யாக்கோபை மிகவும் வெறுத்தான்.ஏனென்றால்தன்னுடைய சேஷ்டபுத்திரபாகத்தையும், தன்னுடைய அசீர்வதத்தையும் திருடிபடியால், தகப்பன் மரித்தப்பின்பு அவனைக் கொன்றுபோடும்படி யோசனைபண்ணினான

OBS Image

இந்தத் திட்டத்தை அறிந்த ரெபெக்காளும் ஈசாக்கும் யாக்கோபை தூரத்தில் உள்ள தன்னுடைய உறவினருடைய வீடிற்கு அனுப்பினார்கள்.

OBS Image

ரெபெக்காளுடைய உறவினருடன் யாக்கோபு அநேக வருடங்கள் வாழ்ந்து, அங்கே திருமணம் செய்து, பன்னிரண்டு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உண்டானது. தேவன் அவனை ஆசீர்வதித்தார்.

OBS Image

இருபது வருடங்கள் கழித்து, யாக்கோபு அவனுடைய குடும்பம், வேலைக்காரர்கள் மற்றும் அவனுக்கு உண்டான எல்லா மிருக ஜீவன்களோடும் தன்னுடைய சொந்த ஊரான கானானுக்குத் திரும்பினான்.

OBS Image

ஏசா தன்னை இன்னும் கொன்றுபோட நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று யாக்கோபு பயந்து, அவனுடைய ஆடு, மாடுகளில் கொஞ்சம் ஏசாவுக்கு பரிசாகக் கொடுக்கும்படி தன்னுடைய வேலைக்காரர்களை அவைகளுக்கு முன்பாக அனுப்பி, உம்முடைய அடியானாகிய யாக்கோபு இவைகளை உமக்குத் தந்தார். அவர் சீக்கிரத்தில் உம்மிடத்தில் வருவார் என்று சொல்லும்படி அனுப்பினான்.

OBS Image

ஆனால் ஏசா தன் சகோதரனுக்குத் தீங்கு செய்ய நினையாமல், அவனைத் திரும்பவும் கண்டதினால் மிகுந்த சந்தோஷமடைந்தான். யாக்கோபு, கானான் தேசத்தில் சமாதானத்தோடு இருந்தான். பின்பு ஈசாக்கு மரித்தான். யாக்கோபும் ஏசாவும் தகப்பனை அடக்கம் செய்தனர். தேவன் ஆபிரகாமோபண்ணின உடன்படிக்கை ஈசாக்கினிடமிருந்து யாக்கோபுக்கு வந்தது.

வேதாகம கதை: ஆதியாகமம் 25:27-35:29