ta_obs/content/04.md

7.9 KiB

4. ஆபிரகாமுடன் தேவனின் உடன்படிக்கை

OBS Image

ஜலபிரளயம வந்து அநேக வருடங்கள் ஆனபின்பு, ஏராளமான ஜனங்கள் உலகத்தில் இருந்தனர். அவர்கள் மற்றவர்களுக்கும் தேவனுக்கும் விரோதமாக பாவம் செய்தனர், ஏனெனில் அவர்கள் எல்லோரும் ஒரே பாஷையை பேசினார்கள். அவர்கள் தேவன் அவர்களுக்கு கட்டளையிட்டதைச் செய்யாமல் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு நகரத்தை கட்டினார்கள்.

OBS Image

அவர்கள் மிகவும் எப்படி வாழ வேண்டுமென்று தேவன் அவர்களுக்குக் கூறின கட்டளைகளுக்கு செவிகொடுக்க மனதில்லாமல், வானம் தொடும் அளவு ஒரு கோபுரத்தைக் கட்ட ஆரம்பித்தனர். இப்படி அவர்கள் சேர்ந்து அநேக பாவங்களை செய்துகொண்டிருந்ததினாலும், மேலும் அநேக பொல்லாத காரியங்கள் செய்யக்கூடும் என்பதையும் அறிந்தார்.

OBS Image

எனவே தேவன் அவர்களுடைய பாஷையை பல பாஷைகளாக பெருகும்படி செய்து, அவர்களை பூமியெங்கும் சிதறப்பண்ணினார். அவர்கள் கட்ட நினைத்த நகரத்தின் பெயர் பாபேல் அப்படியென்றால், குழப்பம் என்று அர்த்தம்.

OBS Image

நூறு வருடங்களுக்குப் பிறகு, ஆபிராம் என்னும் ஒருவனோடு தேவன் பேசி, நீ உன் தேசத்தையும், வீட்டையும் விட்டு நான் உனக்கு காண்பிக்கும் தேசத்திற்கு போ. நான் உன்னை ஆசீர்வதித்து, உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன். நான் உன்னுடைய பெயரை பெருமைப்படுத்துவேன். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவர்களைச் சபிக்கிறேன். பூமியில் உள்ள அனைத்து குடும்பங்களும் உன்னால் ஆசீர்வதிக்கப்படும்."

OBS Image

எனவே ஆபிராம் தேவனுக்குக் கீழ்படிந்தான். அவன் தனது மனைவியாகிய சாராளையையும், தன்னுடைய வேலைக்காரர்களையும், தனக்கு உண்டான எல்லாவற்றோடுங்கூட தேவன் அவனுக்குக் காண்பித்த கானான் தேசத்திற்குப் போனான்.

OBS Image

ஆபிராம் கானான் சேர்ந்தபின்பு, தேவன் அவனிடத்தில், உன்னை சுற்றிலுமுள்ள எல்லாவற்றையும் பார். இந்த தேசத்தை உனக்குத் தருவேன், உன்னுடைய சந்ததி எப்போதும் இதை சுதந்தரித்துக் கொள்வார்கள் என்றார். பின்பு ஆபிராம் அங்கேயே குடியேறி விட்டான்.

OBS Image

உன்னதமான தேவனுடைய ஆசாரியனாகிய மெல்கிசேதேக் என்னும் ஒருவன் இருந்தான். ஒருநாள் யுத்தம் முடிந்து வரும் போது ஆபிராம் அவனைக் கண்டான். மெல்கிசேதேக் ஆபிராமை ஆசீர்வதித்து, வானத்தையும், பூமியையும் உருவக்கின உன்னதமான தேவன் ஆபிராமை ஆசீர்வதிப்பார் என்றான். பின்பு ஆபிராம் யுத்தத்தில் தான் சம்பாதித்த எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கு மெல்கிசேதேக்கிற்கு தசமபாகம் செலுத்தினான்.

OBS Image

அநேக வருடங்களாகியும் ஆபிராமும், சாராயும் பிள்ளை இல்லாதிருந்தார்கள். தேவன் ஆபிராமினிடத்தில் நீ ஒரு குமாரனைப் பெறுவாய், மேலும் வானத்தின் நட்சத்திரங்களைப்போல உன் சந்ததி பெருகும் என்றும் வாக்குத்தத்தம் பண்ணினார். ஆபிராம் தேவனை விசுவாசித்தான். ஆபிராம் தேவனின் வாக்குத்தத்த விசுவாசித்தபடியால் அவனை நீதிமான் என்று சொன்னார்.

OBS Image

பின்பு தேவன் ஆபிராமோடு உடன்படிக்கை பண்ணினார். பொதுவாக உடன்படிக்கை என்பது இருவருக்கு நடுவாக ஏற்படுத்திக்கொள்வது ஆனால் இங்கே, ஆபிராம் நன்றாகத் தூங்கிக்கொண்டிருக்கும்போது அவனோடு உடன்படிக்கைப்பண்ணினார். அப்போது அவனால் தேவனுடைய சத்தத்தை கேட்க முடிந்தது. அவர் கூறியது என்னவென்றால், உனக்கு ஒரு குமாரனைப் பிறக்கும்படி செய்து, உன்னுடைய சந்ததிக்கு கானான் தேசத்தைக் கொடுப்பேன் என்றார், அப்போது ஆபிராமுக்கு பிள்ளை இல்லாதிருந்தது.

வேதாகம கதை:11-15