ta_obs-tn/content/40/04.md

3.8 KiB

இரண்டு கள்ளர்கள்

இதை "இரண்டு கொள்ளைக்காரர்கள்" என்றும் மொழிபெயர்க்கலாம். இது பொருட்களைத் திருடிய அல்லது வன்முறையை ஏற்படுதத்தின குற்றவாளிகளைக் குறிக்கிறது.

நீ தேவனுக்கு பயப்படுகிறதில்லையா?

இந்த கேள்விக்கு அந்தக் கள்ளன் பதிலை எதிர்பார்க்கவில்லை; இது ஒரு இயல்பான அறிக்கையை வெளியிட சில மொழிகள் பயன்படுத்தும் ஒரு வழியாகும். உங்கள் மொழி இந்த வழியில் கேள்விகளைப் பயன்படுத்தாவிட்டால், இதை "தேவனுக்கு நீ பயப்பட வேண்டும்!" என்று மொழிபெயர்க்கலாம்.

நாம் பாவம் செய்தோம் ஆனால் இந்த மனுஷன் ஒரு குற்றமும் செய்யவில்லை

இதை, "நீயும் நானும் பாவம் செய்து மரிப்பதற்கு தகுதியாயிருக்கிறோம், ஆனால் இயேசு என்ற இந்த மனிதன் எந்தத் தவறும் செய்யவில்லை, மரிப்பதற்கான ஒன்றும் செய்யவில்லை". இங்கே "நாம்" என்பது இரு கொள்ளையர்களையும் குறிக்கும், ஆனால் இயேசுவை அதில் சேர்க்கவில்லை. என்று மொழிபெயர்க்கலாம்.

இந்த மனிதன்

இந்த வாக்கியம் இயேசுவை வெளிப்படுத்துகிறது

தயவாய் என்னை நினைத்தருளும்

அதாவது, "தயவுசெய்து என்னை ஏற்றுக்கொள்ளும்" அல்லது, "தயவுசெய்து என்னை நினைத்தருளும்" அல்லது, "தயவுசெய்து என்னை உங்களுடன் இருக்க அனுமதிக்க வேண்டும்." இங்கே "நினைவில் கொள்ளும்" என்பது எதையாவது மறந்துவிட்ட பிறகு அதை நினைவுபடுத்துவதான அர்த்தமல்ல. ஒரு தாழ்மையான கோரிக்கையைத் தெரிவிக்கும் வகையில் இதை மொழிபெயர்க்கவும்.

உம்முடைய ராஜ்யத்தில்

அதாவது, "நீர் உம்முடைய ராஜ்யத்தை ஸ்தாபிக்கும்போது" அல்லது, "நீர் ராஜாவாக ஆட்சி செய்யும் போது."

பரதேசம்

இதன் அர்த்தம் “பரலோகம்”.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்