ta_obs-tn/content/39/12.md

3.3 KiB

கலகம்

அதாவது, "அவர்கள் கோபத்தினால் கலவரம்ச் செயல்களைச் செய்யத் தொடங்கினார்கள்."

அவன் ஒப்புக்கொண்டான்

இயேசு ஒரு நீதிமான் என்று பிலாத்து நம்பினதினால் இயேசுவைக் கொல்ல விரும்பவில்லை. ஆனால், அவன் அந்தக் கூட்டத்தினருக்குப் பயந்ததினால் இயேசுவை சிலுவையில் அறையும்படி தனது வீரர்களிடம்(சேவகர்களிடம்) சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முடிந்தால், இந்த வாக்கியத்தை அவனுடைய தயக்கத்தைக் காட்டும் வகையில் மொழிபெயர்க்கவும்.

ராஜ வஸ்திரம்

அதாவது, "ராஜாவின் அங்கி போன்ற ஒரு அங்கி." இந்த அங்கி ஒரு பிரகாசமான நிறத்தைக் கொண்டிருந்தது, எனவே இது ஒரு ராஜா அணியும் ஒரு வகையான அங்கி போல் இருந்தது.

முற்க்களினால் ஆன ஒரு கிரீடம்

இதன் அர்த்தம் அவர்கள் கிரீடம் போல தோன்றும்படி முற்கிளைகளை ஒரு வட்டமாக கட்டினார்கள். கிரீடம் என்பது ஒரு ராஜா தனது அதிகாரத்தைக் காட்ட தலையில் அணிந்திருக்கும் ஒரு ஆபரணம். ஆனால் அவர்கள் இயேசுவின் தலையில் வைத்த கிரீடத்தில் கூர்மையான, ஆபத்தான முட்கள் இருந்தன.

பார்

அதாவது, "பார்" அல்லது, "இதோ."

யூதர்களின் ராஜா

சேவகர்கள் இயேசுவை கேலி செய்ததினால், இதை "யூதர்களின் ராஜா என்று அழைக்கப்படுவார்" என்று மொழிபெயர்க்கலாம்.

வேதாகமத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்புகள் சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்