ta_obs-tn/content/39/04.md

4.0 KiB

நான்

அதாவது, "நீங்கள் சொன்னது போல் நான் தான்" அல்லது, "நான் மேசியா மற்றும் தேவனுடைய குமாரன் தான்." "நான்" என்பது தேவனின் பெயரும் (பார்க்க 09:14). "நான்" என்று வெறுமனே சொல்வதன் மூலம், இயேசு தான் தேவன் என்று சொல்லிக்கொண்டிருந்தார். முடிந்தால், இதை மொழிபெயர்க்கவும், இதன் மூலம் இயேசுவின் பதிலுக்கும் தேவனின் பெயருக்கும் இடையில் ஜனங்கள் ஒற்றுமையைக் காண்பார்கள்.

தேவனோடு உட்கார்ந்திருப்பது

இதை "தேவனோடு ஆட்சி செய்வது" என்று மொழிபெயர்க்கலாம். தேவன் எல்லாவற்றிற்கும் அதிபதியாக இருப்பதால், ஜனங்கள் அவரைப் பற்றி பரலோகத்தில் வீற்றிருப்பதைப் பற்றி பேசுகிறார்கள். அவர் தேவனோடு வீற்றிருப்பார் என்று சொல்வதன் மூலம், பிதாவுடன் ஆட்சி செய்ய தனக்கும் அதிகாரம் இருப்பதாக இயேசு கூறினார்.

தேவனோடு உட்கார்ந்திருப்பது மற்றும் பரலோகத்திலிருந்து வருவதும்

இதை "தேவனுக்கு பக்கத்தில் உட்கார்ந்து பின்னர் பரலோகத்திலிருந்து வருவது" என்று மொழிபெயர்க்கலாம்.

கோபத்தில் அவனுடைய உடையை கிழித்தல்

துக்கத்தையோ கோபத்தையோ வெளிப்படுத்த யூதர்கள் தங்கள் ஆடைகளைக் கிழித்து விடுவார்கள். துணிகளைக் கிழிப்பது என்பது உங்கள் மொழியில் வேறு எதையாவது குறிக்கிறது என்றால், "அவன் மிகவும் கோபமாக இருந்தான்" போன்ற ஒரு வார்த்தையை மாற்ற விரும்பலாம்.

உங்களுடைய நியாயத்தீர்ப்பு என்ன?

அதாவது, "உங்கள் முடிவு என்ன?" அல்லது, "நீங்கள் என்ன முடிவு செய்தீர்கள் என்று எங்களிடம் சொல்லுங்கள்: அவர் குற்றமற்றவரா அல்லது குற்றவாளியா?" தேவனுக்கு நிகரானவர் என்று இயேசு சொன்னதினால் அவரை தண்டிக்க வேண்டும் என்று பிரதான ஆசாரியர்கள் விரும்பினர்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்