ta_obs-tn/content/39/02.md

2.3 KiB

இயேசுவை சோதிக்கும்படி

இதை, "இயேசு ஏதாவது தவறு செய்ததாக குற்றம் சாட்ட ஒரு முறையான சந்திப்பு இருந்தது." வழக்கமாக ஒருவர் குற்றமற்றவரா அல்லது ஒரு குறிப்பிட்ட குற்றத்தில் குற்றவாளியா என்பதைக் கண்டறிய ஒரு விசாரணை செய்யப்படுகிறது. இந்த வழக்கில், இயேசுவை குற்றவாளியாகக் காட்ட தலைவர்கள் உறுதியாக இருந்தனர். என்று மொழிபெயர்க்கலாம்.

அவரைக் குறித்து பொய் சொல்வது

அதாவது, "அவரைப் குறித்து பொய்களைக் கூறினார்கள்" அல்லது, "அவர் ஏதாவது தவறு செய்ததாக பொய்யாக குற்றம் சாட்டினார்கள்."

அவர்கள் சொல்வது ஒருவரோடொருவர் ஒத்துப்போகவில்லை

இதை, "அவர்கள் இயேசுவைப் பற்றி ஒருவருக்கொருவர் மிகவும் வித்தியாசமாகச் சொன்னார்கள்" அல்லது "சாட்சிகள் ஒருவருக்கொருவர் முரண்பட்ட காரியங்களை இயேசுவைப் பற்றி சொன்னார்கள்." என்று மொழிபெயர்க்கலாம்.

அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை

அதாவது, "அவர் எந்த தவறும் செய்யவில்லை."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்