ta_obs-tn/content/37/01.md

2.6 KiB

ஒரு நாள்

இந்த வாக்கியம் கடந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை அறிமுகப்படுத்துகிறது, ஆனால் குறிப்பிட்ட நேரத்தை குறிப்பிடவில்லை. ஒரு உண்மையான கதையைச் சொல்லத் தொடங்க பல மொழிகள் இதேபோன்ற வழியைக் கொண்டுள்ளன.

மரியாள்

இயேசுவின் தாயின் பெயரும் மரியாள், ஆனால், இது வேறு பெண்.

இந்த வியாதி மரணத்திற்கேதுவானது அல்ல

இதை " இந்த வியாதி மரணத்திற்கேதுவானது அல்ல " அல்லது "லாசருவுக்கு உடம்பு சரியில்லை, ஆனால் மரணம் இந்த நோயின் இறுதி முடிவு அல்ல" என்றும் மொழிபெயர்க்கலாம். லாசரு மரிக்க மாட்டான் என்று இயேசுவின் சீஷர்கள் நினைத்திருக்கலாம். லாசரு நோய்வாய்ப்பட்டு இறந்தாலும், மறுபடியும் ஜீவன் பெறுவான் என்பதை இயேசு அறிந்திருந்தார்.

இது தேவனுடைய மகிமைக்கென்று

அதாவது, "இது தேவன் எவ்வளவு பெரியவர் என்று ஜனங்கள் புகழ்ந்து பேச வைக்கும்."

ஆனால் அவர் இருந்த இடத்தில் இரண்டு நாட்கள் தங்கினார்

இதை, “லாசருவை குணமாக்க நினைத்தும், அவர் இருந்த இடத்தில் மேலும் இரண்டு நாட்கள் தங்கினார்” என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்