ta_obs-tn/content/28/01.md

3.1 KiB

ஒரு நாள்

இந்த வாக்கியம் கடந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை அறிமுகப்படுத்துகிறது, ஆனால் குறிப்பிட்ட நேரத்தை குறிப்பிடவில்லை. ஒரு உண்மையான கதையைச் சொல்லத் தொடங்க பல மொழிகள் இதேபோன்ற வழியைக் கொண்டுள்ளன.

இளம் பணக்கார அதிகாரி

இந்த மனிதன் இளமையாக இருந்தபோதிலும், பணக்கார மற்றும் சக்திவாய்ந்த அரசியல் அதிகாரியாக இருந்தான்.

இயேசுவிடம் வந்து

அதாவது, “இயேசுவை சந்தித்து’.

நல்ல போதகரே

அதாவது, “பரிசுத்தமான போதகர்”. இயேசு ஒரு சாதாரணமாக கற்றுத்தேர்ந்த ஒரு ஆசிரியர் என்று அவன் சொல்லவில்லை.

நித்திய ஜீவனை அடைய

அதாவது, "நித்திய ஜீவனைப் பெறுவது" அல்லது, "தேவனோடு என்றென்றும் வாழ்வது." 27:01 ல் "நித்திய ஜீவன்" எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டது என்பதையும் கருத்தில் கொண்டு, அதைப் பற்றிய மொழிபெயர்ப்பை அங்கே பாருங்கள்.

‘நல்லவன்’ என்று எப்படி நீ சொல்கிறாய்

இயேசு தாம் ஒரு தேவன் என்பதை அங்கே மறுக்கவில்லை. மாறாக, அந்த அதிகாரி இயேசுவை ஆண்டவர் என்று புரிந்துகொண்டானோ என்று அறியவே அவ்வாறு கேட்டார்.

நல்லவன் என்று யார் இருக்கிறார்கள், அது தேவன் ஒருவரே

இதைச் சொல்வதற்கான மற்றொரு வழி, "உண்மையிலேயே நல்லவர் தேவன் மட்டுமே" அல்லது, "தேவன் மட்டுமே நல்லவர்."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்