ta_obs-tn/content/25/01.md

2.4 KiB

பரிசுத்த ஆவியானவர் அவரை நடத்தினார்

அதாவது, "பரிசுத்த ஆவியானவர் அவரை வழிநடத்தினார்" அல்லது, "பரிசுத்த ஆவியானவர் அவரை கொண்டுபோனார்."

வனாந்திரம்

இதை "பாலைவனம்" அல்லது "வனாந்திரமான ஒரு இடம்" என்று மொழிபெயர்க்கலாம். இந்த இடத்தில் மிகக் குறைவான மரங்கள் அல்லது பிற தாவரங்கள் இருந்திருக்கலாம், எனவே பெரும்பாலான மக்கள் அங்கு வாழ முடியாது.

நாற்பது நாள் இரவும் பகலும்

இதன் அர்த்தம் "நாற்பது நாட்கள், பகல் மற்றும் இரவு நேரங்களில்." இந்த வாக்கியத்தின் மொழிபெயர்ப்பு எண்பது நாட்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அவரை பாவம் செய்யும்படி சோதித்தான்

இயேசு பாவம் செய்யாததால், இயேசுவை பாவத்திற்கு சாத்தான் தூண்டி வெற்றி பெறவில்லை என்னும் வார்த்தையை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த சொற்றொடரை "அவரை பாவம் செய்ய சம்மதிக்க முயன்றது" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்