ta_obs-tn/content/23/09.md

2.2 KiB

கொஞ்ச காலத்திற்குப் பின்பு

ஞானிகள் நட்சத்திரத்தைப் பார்ப்பதற்கு முன்பும் இயேசு பிறந்த பிறகும் எவ்வளவு காலம் ஆனது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் பயணத்திற்குத் தயாராகி பின்பு பெத்லகேமுக்குப் பயணம் செய்ய இரண்டு வருடங்கள் ஆயிருக்கலாம்.

ஞானிகள்

"ஞானிகள்" அநேகமாக நட்சத்திரங்களைப் படித்த ஜோதிடர்கள். மேசியாவின் பிறப்பை முன்னறிவித்த பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களையும் அவர்கள் தெரிந்திருக்கலாம்.

விசித்திரமான நட்சத்திரம்

அவர்கள் கவனித்த நட்சத்திரம் சாதாரண நட்சத்திரம் அல்ல. அது இயேசு பிறந்த நேரத்தில் தோன்றிய ஒன்று.

அவர்கள் அறிந்துகொண்டனர்

சில மொழிகள், "அவர்களின் படிப்பிலிருந்து, இந்த அறிஞர்கள் உணர்ந்தனர்" என்று சொல்லலாம்.

வீடு

அவர் பிறந்த அந்த விலங்குகளுக்கான இடத்தில் அவர்கள் இனியும் தங்கவில்லை.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்