ta_obs-tn/content/23/01.md

3.3 KiB

அவனுடைய குழந்தை அது இல்லை என்பதை அவன் அறிந்திருந்தான்.

அதாவது, "அவள் கர்ப்பமாவதற்கு அவன் காரணமாக இல்லை என்று அவனுக்குத் தெரியும்."

திருமணம் செய்துகொள்ள தயங்கினான்

அதாவது, "மரியாளை பகிரங்கமாக அவமானப்படுத்துவது" அல்லது "மரியாளை எல்லோருக்கும் முன்பாக வேதனைப்படுத்துவது." அவள் விபச்சாரம் செய்பவள் என்று தோன்றினாலும், யோசேப்பு மரியாளின்மேல் தயவாய் இருந்தான். .

பேசாமல் அவளைத் தள்ளிவிட (விவாகரத்து செய்ய) யோசித்தான்

இதை "மற்றவர்களுக்கு சொல்லாமல் ஏன் விவாகரத்து செய்ய அவன் முடிவு செய்தான்" அல்லது "அவள் கர்ப்பமானத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லாமல் அவளை விவாகரத்து செய்ய திட்டமிட்டான்" என்றும் மொழிபெயர்க்கலாம். யோசேப்பு ஒரு நீதிமான் என்பதால், நிலைமையை முடிந்தவரை நல்ல முறையில் தீர்க்க விரும்பினான், இதன் விளக்கம் அவளை அமைதியாக விவாகரத்து செய்வது.

அவளை விவாகரத்து செய்ய

சில மொழிகளுக்கு, "அவர்களின் நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொள்ள" என்று சொல்வது நல்லது. யோசேப்பும் மரியாளும் நிச்சயதார்த்தம் செய்திருந்தனர் அல்லது "திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்திருந்தனர்." ஆனால் யூத கலாச்சாரத்தில் ஒரு நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொள்ள விவாகரத்து தேவைப்பட்டது.

சொப்பனத்தில்

அதாவது, "அவன் தூங்கிக் கொண்டிருந்தபோது கனவு பார்த்தான்."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்