ta_obs-tn/content/15/01.md

2.9 KiB

கடைசியில் நேரம் வந்தபோது

"கடைசியாக" என்றால் "இறுதியாக" அல்லது, "நீண்ட காத்திருப்புக்குப் பிறகு" என்று அர்த்தம். "நேரம்" எதைக் குறிக்கிறது என்பதை தெளிவுபடுத்துவதற்கு, "அவர்கள் 40 ஆண்டுகளாக வனாந்திரத்தில் அலைந்து திரிந்த பிறகு, தேவன் இறுதியாக அனுமதித்தார்" என்று நீங்கள் கூறலாம்.

கானானில் உள்ள எரிகோ பட்டணத்திற்கு இரண்டு வேவுகாரர்கள்

இதை, "கானானில் உள்ள எரிகோ என்ற நகரத்திற்கு இரண்டு பேர் என்று மொழிபெயர்க்கலாம், இது பற்றிய தகவல்களை அறிய." 14:04 ல் "தேசத்தை உளவு பார்க்கவும்" என்பதற்கான குறிப்புகளையும் காணலாம்.

கனமான சுவர்களால் பாதுகாக்கப்பட்ட

இதை "தங்கள் எதிரிகளிடமிருந்து பாதுகாக்க கல்லால் ஆன தடிமனான, வலுவான சுவர்களால் முற்றிலும் கட்டப்பட்ட" என்று மொழிபெயர்க்கலாம்.

தப்பிக்க

"எரிகோவில் உள்ள மக்களுக்கு தீங்கு செய்ய விரும்பியவர்களிடமிருந்து தப்பிக்க" என்று சொல்லலாம்.

அவளுடைய குடும்பம்

ரஹாப் தனது தந்தை, தாய், சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு பாதுகாப்பு கேட்டார். இந்த நபர்களை உள்ளடக்கிய குடும்பத்திற்கு உங்கள் வார்த்தையைப் பயன்படுத்தவும்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்