ta_obs-tn/content/14/12.md

2.6 KiB

அற்புதமாக கற்பாறையிலிருந்து தேவன் அவர்களுக்கு குடிக்க நீரைக் கொடுத்தார்

இதை, "தேவனால் மட்டுமே செய்யக்கூடிய ஒன்றைச் செய்வதன் மூலம், அவர் ஒரு பாறையிலிருந்து தண்ணீரை வரவழைத்தார், அதனால் மக்களும் விலங்குகளும் குடிக்க முடியும்." என்று மொழிபெயர்க்கலாம்.

ஆனால் இதில் எல்லாம்

இதை, "ஆனால் தேவன் உணவு, தண்ணீர், உடை மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுத்தாலும்." என்று மொழிபெயர்க்கலாம்.

ஆயினும்

இதை, "இஸ்ரவேலர்கள் தேவனுக்கு எதிராக கலகம் செய்து, முறுமுறுத்தார்கள்." என்று மொழிபெயர்க்கலாம்.

ஆனாலும் தேவன் அவருடைய வாக்குத்தத்தத்தின்படி நீதியுள்ளவராய் இருந்தார்

இதை, "ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபுக்கு அவர் சொன்னதை தேவன் தொடர்ந்து செய்தார்." அவர்களுடைய சந்ததியினருக்குத் தேவையானதை அவர் கொடுத்தார், அதனால் அவர்கள் வாழ்வதற்கும் ஒரு பெரிய தேசமாக மாறுவதற்கும் இறுதியில் கானான் தேசத்தை சொந்தமாக்குவதற்கும் முடியும். என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்