ta_obs-tn/content/13/02.md

3.2 KiB

உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள்

இதை "என் உடன்படிகையில் சொல்லுகிறபடி நீங்கள் செய்யுங்கள்" என்று மொழிபெயர்க்கலாம். உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிவதும் கடைப்பிடிப்பதும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள் அல்ல. இதை தெளிவுபடுத்துவதற்கான ஒரு வழி, "என் உடன்படிக்கையை கடைப்பிடிப்பதன் மூலம் எனக்குக் கீழ்ப்படியுங்கள்" என்று சொல்வது. தம்முடைய உடன்படிக்கைக்கு என்ன தேவை என்பதை தேவன் விரைவில் அவர்களுக்குத் தெரியப்படுத்துவார்.

என்னுடைய சொந்த ஜனம்

இதை, "நான் மிகவும் நேசிக்கும் என் உடைமையாக நீங்கள் இருப்பீர்கள்" அல்லது "வேறு எந்த குழுவினரை விடவும் நான் அதிகமாக மதிப்பிடும் ஜனங்களாக நீங்கள் இருப்பீர்கள்" அல்லது "நீங்கள் என் சொந்த விலைமதிப்பற்ற மக்களாக இருப்பீர்கள்." என்று மொழிபெயர்க்கலாம்

நீங்கள் ராஜரீக ஆசாரியக்கூட்டமாய் இருப்பீர்கள்

இதை, "நான் உங்கள் ராஜாவாக இருப்பேன், நீங்கள் ஆசாரியர்களைப் போல இருப்பீர்கள்." இஸ்ரவேலர் தேவனைப் பற்றி மற்ற தேசங்களுக்கு போதிக்க வேண்டும், தேவனுக்கும் இஸ்ரவேலருக்கும் இடையில் செல்ல இஸ்ரவேல் தேசத்தில் ஆசாரியர்கள் இருந்ததைப் போலவே தேவனுக்கும் தேசங்களுக்கும் இடையில் ஒரு மத்தியஸ்தராக இருக்க வேண்டும் என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்