ta_obs-tn/content/09/12.md

2.6 KiB

அவனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்

ஆடுகளை புல் மற்றும் தண்ணீருக்கு வழிகாட்டவும், அவற்றைப் பாதுகாக்கவும் ஒரு மேய்ப்பனின் வேலையை அவன் செய்து கொண்டிருந்தான் என்பதே இதன் அர்த்தம். இதை "ஆடுகளை வளர்ப்பது" என்று மொழிபெயர்க்கலாம்.

பச்சை மரம் எரியவில்லை

தேவன் பச்சை மரத்தை அக்கினியாக்கினார், ஆனால் நெருப்பு அந்த மரத்தை சேதப்படுத்தவில்லை.

தேவனுடைய சத்தம் சொன்னது

இதை "தேவன் சத்தமாக சொன்னார்" என்று மொழிபெயர்க்கலாம். தேவன் பேசுவதை மோசே கேட்டான், ஆனால் அவன் தேவனைக் காணவில்லை.

செருப்பைக் கழற்று

அவன் தேவனை கணப்படுத்துகிறான் என்பதைக் காட்ட அவன் தனது காலணிகளை கழற்ற வேண்டும் என்று தேவன் விரும்பினார். இதற்கான காரணத்தை தெளிவுபடுத்த, "நீங்கள் பரிசுத்த பூமியில் இருப்பதால், உங்கள் காலணிகளை கழற்றுங்கள்" என்று நீங்கள் கூறலாம்.

பரிசுத்த ஸ்தலம்

தேவன் அதை சாதாரண நிலத்திலிருந்து ஒதுக்கி வைத்து, தன்னை வெளிப்படுத்தும் ஒரு சிறப்பு இடமாக மாற்றினார் என்ற அர்த்தத்தினால் அது பரிசுத்தமானது.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்