ta_obs-tn/content/02/08.md

3.6 KiB

நீங்கள் நிர்வாணி என்று சொன்னது யார்?

அல்லது, நீங்கள் நிர்வாணியாய் இருக்கிறீர்கள் என்று எப்படி அறிந்தீர்கள்? இந்த எல்லா கேள்விகளுக்கும் தேவன் முன்பே பதிலை அறிந்திருந்தார். இந்த கேள்வி மற்றும் பின்வரும் எல்லா கேள்விகளும் தேவனால் கேட்கப்பட்டதின் நோக்கம் என்னவெனில் ஆதாம் தேவனுக்குக் கீழ்படியாததை ஒப்புக்கொள்வதற்கு தான். அவன் நிர்வாணமாய் இருந்தது பாவம் அல்ல. தேவன் அவர்களை அப்படிதான் உண்டாக்கினார். ஆனால் அவர்கள் நிர்வாணிகள் என்று அறிந்ததே பாவம். அவர்கள் வெட்கப்பட்டது தான் அவர்கள் பவம் செய்ததைக் காண்பித்தது.

அவள் எனக்கு அந்த கனியை கொடுத்தாள்

தனது கீழ்ப்படியாமையை ஒப்புக்கொள்வதையும், கடவுளுக்குக் கீழ்ப்படியாததற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதையும் விட ஆண் அந்தப் பெண்ணைக் குற்றம் சாட்டினார்.

நீ என்ன செய்தாய்?

அல்லது, நீ ஏன் இதை செய்தாய்? இந்த கேள்விக்கு பதிலை தேவன் முன்பே அறிந்திருந்தார். இந்த கேள்வி கேட்பதினால், அந்த பெண் தான் செய்த தவறை ஒப்புக்கொள்ள அவளுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தார். மேலும் அவள் அந்த குற்றத்தை செய்யாமல் இருந்திருக்கலாம் என்பதை அறியவும் செய்தார்.

பாம்பு என்னை வஞ்சித்தது

பாம்பு அவளை ஏமாற்றியது அல்லது தவறாக வழிநடத்தியது. அது அவளிடத்தில் பொய் சொன்னது. வார்த்தையினால் ஏமாற்றியது அல்லது சூனியம் செய்தது என்ற வார்த்தை பயன்படுத்த வேண்டாம். அந்த பெண் தான் செய்த தவறை தேவனிடத்தில் ஒப்புக்கொள்ளாமல், அல்லது அந்த குற்றத்தின் பொறுப்பை ஏற்காமல் பாம்பின்மேல் பழியை சுமத்தினாள்

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்