ta_obs-tn/content/01/10.md

3.3 KiB

கொஞ்சம் மண்ணை எடுத்து

தேவன் மனிதனை புழுதியிலிருந்து, அல்லது தரையிலிருந்த மண்ணினால் உண்டாக்கினார்.

அதை உருவாக்கி

தேவன் மனிதனை விசேஷமாக உருவாக்கியதை இந்த வார்த்தை உணர்த்துகிறது, அதாவது ஒருவன் தன்னுடைய கையினால் ஒரு பொருளை செய்வதுபோல. அதை உறுதிபடுத்தும் விதமாக உருவாக்கு என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர் தம்முடைய வார்த்தையினால் உண்டாக்கிய மற்ற எல்லாவற்றையும்விட இது முற்றிலும் வித்யாசமானது.

ஒரு மனிதன்

இந்த சமயத்தில் ஒரு மனிதன் தான் உருவாக்கப்பட்டான்; பின்பு பெண் வேறு விதமாக உருவாக்கப்பட்டாள்

ஜீவ சுவாசத்தை ஊதுதல்

இந்த வாக்கியம் தேவனுடைய சொந்தமான, தனிப்பட்ட முறையில் தம்முடைய சுவாசத்தை ஆதாமின் சரீரத்திற்குள் அனுப்பி, இதை பார்க்கும்போது ஒரு மனிதன் எப்படி காற்றில் சுவாசிக்கிறான் என்பதை உணர முடிகிறது.

உயிர்

இந்த சம்பவத்தில், தேவன் ஆவிக்குரிய மற்றும் சரீர சுவாசத்தை மனிதனுக்குள் ஊதினார்.

ஆதாம்

ஆதாமின் பெயர் மனிதன் என்பதற்கான பழைய ஏற்பாட்டு வார்த்தை போன்றது மேலும் அவன் உருவான தூசி என்ற வார்த்தையையும் குறிக்கும்

தோட்டம்

இந்த இடத்தில் உணவுக்காக, அல்லது அழகு தரும்படிக்கு மரங்கள் செடிகள் நடப்பட்டிருந்த இடம்.

கவனித்துக்கொள்ள

அந்த தோட்டத்தை பராமரிக்கவும், களைகளை பிடுங்கவும், தண்ணீர் விடவும், பயிரிடவும், நடவும், இன்னும் பல.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்